ஜிம்பாப்வே துவம்சம் செய்த இந்தியா.. ஷிகர், சுப்மான் கில் அடித்து நொறுக்கினர்.. இந்தியா புதிய சாதனை
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Recommended Video
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து தீபக் சாஹர் 6 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.
இதனையடுத்து தொடக்க வீரர் இன்னசண்ட் காலா 4 ரன்களிலும், மறுமானி 8 ரன்களிலும் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

தடுமாறிய நடுவரிசை
இதே போன்று வீஸ்லி 5 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென் வில்லியம்ஸ் 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். வங்கதேசத்துக்கு எதிராக சதம் விளாசிய சிக்கந்தர் ராசா, இந்தியாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ராசா 12 ரன்களில் வெளியேறினார்.

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்
ஜிம்பாப்வே அணி கடுமையாக தடுமாறிய போது, கேப்டன் ரிஜிஸ் சக்பவா மட்டும் தனி ஆளாக போராடி 35 ரன்கள் எடுத்து அக்சர் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 9 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிராட் இவன்ஸ் மற்றும் ரிச்சர்ட்ஸ் பொறுமையாக விளையாடினர்.

இந்திய பந்துவீச்சு
இருவரும் ஜிம்பாப்வே அணிக்கு கௌரவமான இலக்கை பெற்று தரும் என போராடினார். ஆட்டம் செல்ல செல்ல, ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. இதனையடுத்து இந்த ஜோடி பவுண்டரிகளை விளாசி, 9வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனையடுத்து 40.3வது ஓவரில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர் பட்டேல், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அபார ஆட்டம்
இதனையடுத்து தொடக்க வீரராக ஷிகர் தவான், சுப்மான் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியாமல் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் திணறினர். தவான், சுப்மான் கில் ஆகியோர் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். 30,5வது ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடி 4 இன்னிங்சில் 3 முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 13 முறையாக இந்திய அணி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications