Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட், ODI நம்பர் 1 வேணுமா.. அதுவும் இருக்கு.. டி20யிலும் நம்பர் 1 இருக்கு.. இந்திய அணி சாதனை

மும்பை : சேத்தன் சர்மா வீடியோவால் இந்திய கிரிக்கெட் உலகில் சர்ச்சை ஏற்பட்டாலும், இன்று ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்திலும் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரலியா 111 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்து 106 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், நியூசிலாந்து 100 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

எனினும் டெல்லியில் நடைபெறும் 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த இடத்தை இந்திய அணி தக்க வைத்து கொள்ளும். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சொந்த மண்ணில் இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை தலா 3க்கு0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது.

அஸ்வின் முன்னேற்றம்

அஸ்வின் முன்னேற்றம்

இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் கடந்த மாதம் நம்பர் 1 இடத்தை இந்தியா பிடித்தது. இதே போன்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னறியுள்ளார். முதல் இடத்தில் உள்ள பாட் கம்மின்ஸ்க்கும் அஸ்வினுக்கும் வெறும் 21 புள்ளிகள் தான் இடைவெளியில் இருக்கிறது.

ரோகித் உயர்வு

ரோகித் உயர்வு

இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மாறாக ஆஸ்திரலிய அணியின் தொடக்க வீரர் டவிட் வார்னர் 6 இடங்கள் சரிந்து 20வது இடத்தில் உள்ளார்.

 அக்சர் பட்டேல் உச்சம்

அக்சர் பட்டேல் உச்சம்

சேத்தன் சர்மா வீடியோவால் இந்திய கிரிக்கெட் உலகில் சர்ச்சை ஏற்பட்டாலும், இன்று ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது

Story first published: Wednesday, February 15, 2023, 16:37 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+