பின்னி பெடலெடுக்க பிடரியில் அடிவாங்கி 58 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
மிர்பூர்: வங்கதேசத்துக்கு ஒருநாள் போட்டியில் 105 ரன்களில் சுருட்டியதற்காக வங்கதேசத்தை 58 ரன்களில் முடக்கி பழிதீர்த்துக் கொண்டது இந்தியா.
சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

மழை குறுக்கிட்டது
இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி விளையாடியக் கொண்டிருந்த போது 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழைகாரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.

ஓவர்கள் குறைப்பு
இதனால் ஆட்டம் தடைபட்டது. டக்வெர்த் லீவீஸ் முறைப்படி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் உத்தப்பா 14 ரன்களிலேயே அவுட் ஆகிப் போனார்.

சரிந்த விக்கெட்டுகள்
வங்கதேசம் அபாரமாக பந்து வீசியது. இதனால் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறிக் கொண்டே இருந்தனர். இந்திய கேப்டன் ரெய்னா மட்டுமே 27 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் உமேஷ் யாதவ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறிக் கொண்டிருந்தனர்.

105 ரன்களில் சுருண்டது
இந்திய அணி, 25.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 106 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்ற எளிதான இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

தர்ம அடி வாங்கிய வங்கதேசம்
இந்தியாவை 105 ரன்களில் சுருட்டிய மிதப்புடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தர்ம அடிதான் கிடைத்தது. வங்கதேசத்தின் மிதுன் அலி 26, ரஹீம் 11 ரன்கள்தான் எடுத்தனர்.

58 ரன்களில் வீழ்ந்தது
அந்த அணியின் 5 வீரர்கள் டக் அவுட் ஆயினர். 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 58 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேசம்.

பிடலெடுத்த பின்னி
இந்திய அணியின் பின்னி 6 விக்கெட்டுகளையும் மோகித் சர்மா 4 விக்கெட்டுகளை அள்ளினர்.

தொடரைக் கைப்பற்றிய இந்தியா
இதனால் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications