Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆபத்தான விஷயம்.. உயிரோடு விளையாட வேண்டாம்.. இந்திய பவுலர்கள் மீது கொந்தளித்த ஆஸி.. என்ன நடந்தது?

சிட்னி: இந்திய பவுலர்கள் தற்போது எல்லாம் மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவதாக ஆஸ்திரேலியா அணியின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் நடந்து வருகிறது .

டெஸ்ட் போட்டிக்கு தயார் ஆகும் வகையில் இன்று இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கும் இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டம் பெரிய அளவில் சர்ச்சையானது. அன்றைய தினம் ஒரே நாளில் அடுத்தடுத்து 20 விக்கெட்டுகள் விழுந்தது. பிங்க் பால் மேட்ச் என்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் வேகமாக விக்கெட்டுகள் விழுந்தது.

மோசம்

மோசம்

அதிலும் இரவு நேரத்தில் இந்த பந்தை பார்த்து அடிக்க முடியாமல் வீரர்கள் கஷ்டப்பட்டனர். 7 மணிக்கு பின், லைட் வெளிச்சத்தில் இந்த பந்தை சரியாக பார்த்து வீரர்களால் அடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த பவுலர்கள் வரிசையாக பவுன்சர்களை வீசினார்கள். அதிலும் ஆஸ்திரேலியாவின் 11வது பேட்ஸ்மேன் ஹாரி கான்வாய்க்கு பவுன்சர்களை வீசினார்கள்.

 பவுன்சர்

பவுன்சர்

ஹாரி கான்வாய் பவுலர். அவருக்கு போய் 140+ கிமீ வேகத்தில் பவுன்சர்கள் வீசப்பட்டதை பார்த்து ஆஸி பேன்ஸ் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஒரு பவுன்சரில் கான்வாய் தலையில் அடிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் கிரீன், வில் புக்கோவ்ஸ்கி போன்ற வீரர்கள் இதேபோல் தலையில் அடிப்பட்டு தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

சிக்கல்

சிக்கல்

அப்படி இருக்கும் போது இந்திய பவுலர்கள் தொடர்ந்து இப்படி தலையை குறி வைத்து பவுன்சர்களை வீசுவது விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் இதை கண்டித்து உள்ளனர் . ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக பவுன்சர்களை வீச கூடாது.. அவர்கள் உயிரோடு விளையாடுகிறார்கள், இது ஆபத்து என்று விமர்சித்து உள்ளனர்.

Story first published: Sunday, December 13, 2020, 14:46 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+