
கவனம் தேவை
எனினும் இந்திய அணி நெதர்லாந்து போன்ற அணியை குறைத்து மதிப்பிட கூடாது. ஏனென்றால் நெதர்லாந்து அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. இது போன்ற கத்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்திய அணி கவனத்துடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்.

ஹர்திக்கிற்கு காயம்?
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் 40 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் பேட்டிங் செய்யும்போது கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் தெரிந்தது. இதனால் அவருக்கு நெதர்லாந்து எதிரான ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹர்திக் உடல்தகுதி
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் , ஹர்திக் பாண்டியா உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாட ஃபிட்டாக தான் இருக்கிறார். நாங்கள் எந்த வீரர்களுக்கும் ஓய்வு வழங்க போவதில்லை. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றதால் இந்திய அணிக்கு ஒரு உத்வேகம் கிடைத்துள்ளது.

ஓய்வு கிடையாது
தனிப்பட்ட வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.இந்த நிலையில் வீரர்களுக்கு நாங்கள் ஓய்வு வழங்கினால் அது கெட்டுவிடும். ஹர்திக் பாண்டியாவும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நினைக்கிறார். இதனால் இந்த தருணத்தில் நாங்கள் யாருக்கும் ஓய்வு வழங்கப்போவதில்லை. ஹர்திக் பாண்டியா எங்களுக்கு ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார்.

யாருக்கு வாய்ப்பு
ஹர்திக் பந்து வீச்சும் சிறப்பாக செய்கிறார். பேட்டிங் எங்களுக்காக ஆடுகிறார். அது மட்டும் இல்லாமல் களத்தில் அவர் நடந்து கொண்ட விதம் எங்களுக்கு பலமாக அமைந்தது என்று பராஸ் கூறியுள்ளார்.இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்த அக்சர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கி விட்டு அந்த இடத்தில் சாஹலை பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா இதுவரை ஒரு சர்வதேச t20 போட்டியில் கூட எதிர்கொண்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











