Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது இப்படி ஒரு ரெக்கார்டா? முதல்ல குல்தீப், சிராஜ் இப்போ ஷமி.. பவுலிங்கில் வரலாறு படைத்த இந்தியா

மொஹாலி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அத்துடன் இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது இந்திய அணி. இந்த அபாரமான வெற்றியின் மூலம், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 அணியாக மாறி இருக்கிறது.

 India bowling record - kuldeep yadav siraj shami took 5 wicket in same month

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் அற்புதமாக செயல்பட்டனர். இந்திய அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர்.

முகமது ஷமி துல்லியமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி இதன் மூலம் அரிய சாதனை ஒன்றை இந்திய அணி செய்ய காரணமாகவும் விளங்கினார்.

முகமது ஷமி : இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார், இந்தியா சார்பில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 India bowling record - kuldeep yadav siraj shami took 5 wicket in same month

ஆட்டநாயகன் : ஷமி முதல் ஓவரிலேயே அற்புதமாக பந்து வீசினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். அவரது சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட் மற்றும் ஸீன் அபாட் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.

ஒரே மாதத்தில் மூன்று முறை : இந்திய அணி வீரர்கள் இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை ஒரே ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் ஒரே மாதத்தில் மூன்று பந்துவீச்சாளர்கள் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை.
2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன் பின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் முகமது சிராஜ். தற்போது முகமது ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Saturday, September 23, 2023, 10:20 [IST]
Other articles published on Sep 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+