Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ருதுராஜ் ஆடும் போட்டியை "பிளாக் அவுட்" செய்த பிசிசிஐ.. கொந்தளித்த ரசிகர்கள்.. என்ன நடந்தது?

அனந்தபூர்: துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதும் போட்டியும், இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் மோதும் போட்டியும் ஒரே சமயத்தில் வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என முதலில் சொல்லப்பட்டிருந்தது. முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டும் ஒரே சமயத்தில் நேரலை செய்யப்பட்டன. அதேபோல, இரண்டாவது சுற்றும் நேரலை செய்யப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதும் போட்டி மட்டுமே நேரலையில் காட்டப்படுகிறது.

ruturaj gaikwad duleep trophy


ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ஆடிவரும் இந்தியா சி மற்றும் இந்தியா பி அணிகள் ஆடி வரும் போட்டி நேரலையில் காட்டப்படவில்லை. இதை அடுத்து ரசிகர்கள் பிசிசிஐ-யை விமர்சித்து வருகின்றனர். இந்தியா சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கிறார் என்பதாலேயே அந்த அணிக்கு அதிக அளவில் "திடீர் ரசிகர்கள்" உருவாகி உள்ளனர். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கும் அணி என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் இந்தியா சி அணி ஆடும் போட்டிகளை பார்க்க ஆவலாக உள்ளனர்.

இதை தவிர்த்து அந்த அணியில் சாய் சுதர்சன், இஷான் கிஷன், போன்ற முக்கிய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும், பாபா இந்திரஜித் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வருகிறார். மானவ் சுதர் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்தியா சி அணி தனது முதல் போட்டியிலும் இந்தியா டி அணியை வீழ்த்தி இருந்தது. அதேபோல, இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கும் மேல் சேர்த்து வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போட்டியின் இடையே ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்து பாதியிலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்போது எதனால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், நேரலை செய்யப்படாததால் என்ன நடந்தது? என தெரியாமல் ரசிகர்கள் அவதியுற்றனர். அதேபோல, இந்த போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாததால் இந்த போட்டிக்கு டிஆர்எஸ் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை அடுத்து, "பிசிசிஐ இத்தனை பெரிய பணக்கார அமைப்பாக இருந்தாலும் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை செய்யாமல் இருக்கிறது. இவர்கள் எப்படி அடுத்த கட்டமாக கிரிக்கெட்டை வளர்க்கப் போகிறார்கள்? உள்ளூர் தொடரான துலீப் ட்ராபியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், அதன் போட்டிகள் அனைத்தும் நேரலை செய்யப்படவில்லை என்பது அவமானகரமான விஷயம்." என விளாசி வருகின்றனர்.

இந்தியாவில் மற்றும் இந்தியா சி அணிகள் மோதிய போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா சி அணி முதல் இன்னிங்ஸில் 525 ரன்கள் சேர்த்து உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 58, சாய் சுதர்சன் 43, ரஜத் படிதார் 40, இஷான் கிஷன் 111, பாபா இந்திரஜித் 78, மானவ் சுதர் 82 ரன்கள் சேர்த்து இருந்தனர்.

Story first published: Friday, September 13, 2024, 15:23 [IST]
Other articles published on Sep 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+