Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா, குல்தீப் யாதவுக்கு ஆப்பு வைக்கப் போகும் 22 வயது இளம் ஸ்பின்னர்.. 7 விக்கெட்.. அசர வைத்த மானவ்

அனந்தபூர்: இந்திய டெஸ்ட் அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவுக்கு ஒரு 22 வயது இளம் வீரரால் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா சி அணியில் இடம் பெற்று இருக்கும் மானவ் சுதர் என்ற இடது கை சுழற் பந்துவீச்சாளர் அபாரமாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினார். இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. ஐந்து மாத இடைவெளியில் இந்திய அணி பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் சீசனுக்கு தகுதியான வீரர்களை தேர்வு செய்யும் வகையில் துலீப் ட்ராபி எனும் உள்ளூர் டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

ravindra jadeja kuldeep yadav duleep trophy

அந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதின. இந்தப் போட்டியில் மானவ் சுதர் முதல் இன்னிங்ஸில் 7 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் ஒரு ஓவருக்கு 4.85 ரன்கள் விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்திருந்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அதற்கு நேர் மாறாக பந்து வீசி இந்தியா டி அணியை நிலை குலைய வைத்தார் மானவ் சுதர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சி அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் முதல் ஆறு ரன்கள் வரை விட்டுக் கொடுத்து இருந்தனர். இந்தியா டி அணி அதிரடியாக ரன் குவித்தது. ஆனால், மானவ் சுதர் 19.1 ஓவர் பந்து வீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். ஏழு மெய்டன் ஓவர்களையும் வீசி இருந்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 2.55 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார்.

இதை அடுத்து ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்திய மானவ் சுதருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர் பேட்டிங்கும் செய்வார் என்பதால் ஆல் ரவுண்டராகவும் இந்திய அணியில் இடம் பெற முடியும். இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என நான்கு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே வலது கை சுழற் பந்துவீச்சாளர் ஆவார்.

அந்த வகையில் மானவ் சுதர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் நான்கு இடது கை சுழற் பந்து வீச்சாளர்களில் ஒருவர் வாய்ப்பை இழக்க நேரிடும். ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது 35 வயதாகும் நிலையில் அவரை டெஸ்ட் அணியில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மானவ் சுதர் சிறப்பாக ஆடி இருப்பது அவருக்கு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது.

Story first published: Saturday, September 7, 2024, 16:52 [IST]
Other articles published on Sep 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+