
பாகிஸ்தான் சாதனை
பாகிஸ்தான் அணி கடந்த 2016 டி20 உலகக்கோப்பை தொடர் முதல் தொடர்ந்து 11 டி20 தொடர்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 2016இல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 1-2 என தோல்வி அடைந்து இருந்தது.

வெற்றிப் பயணம் முடிந்தது
அதன் பின் 11 தொடர்களில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் வெற்றிப் பயணத்தை தென்னாப்பிரிக்க அணி முடித்து வைத்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியாவின் வாய்ப்பு
இந்நிலையில், பாகிஸ்தான் சாதனையை அடுத்த சில நாட்களில் சமன் செய்யும் வாய்ப்பு இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றினால் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் தொடர்ந்து 11 டி20 தொடர்களில் வென்ற உலக சாதனையை பகிர்ந்து கொள்ளும்.

இந்தியா 10 வெற்றிகள்
இந்திய அணி கடைசியாக 2017இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பின்னர், 10 டி20 தொடர்களில் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது, இதில் நிதாஸ் ட்ராபி வெற்றியும் அடக்கம்.

வேற வாய்ப்பு கிடைக்காது
பாகிஸ்தான் சாதனையை முறியடிக்க இதை விட வேறு ஒரு வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. 11 டி20 தொடர்களில் தொடர் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்பதால் இந்தியா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரோஹித் சாதனை செய்ய வாய்ப்பு
மேலும், இந்த டி20 தொடரை இந்தியா வென்றால் ரோஹித் சர்மா கேப்டனாக சாதனை செய்ய வாய்ப்புள்ளது. கோலியை முந்தி இந்திய அணிக்காக அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார்.


Click it and Unblock the Notifications