For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனியும் தோனியை நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது.. அவர கொஞ்சம் என்ஜாய் பண்ண விடுங்க!!

Recommended Video

இனியும் தோனியை நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது.. அனில் கும்ப்ளே கருத்து- வீடியோ

மும்பை : இந்திய அணியின் தூணாக இருக்கும் தோனியின் சமீப கால பேட்டிங் செயல்பாடுகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த ஆண்டில் தோனி இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அது மட்டுமில்லாமல், நிறைய பந்துகளை வீணடிக்கிறார் என்ற புகாரும் கூறப்படுகிறது.

இது பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அனுபவித்து ஆட விடுங்க

அனுபவித்து ஆட விடுங்க

அனில் கும்ப்ளே தன் கருத்தாக, "இந்திய நடுவரிசை பேட்டிங் இன்னும் நிலையாக அமையவில்லை. மேலும், இந்திய அணி தோனியை போட்டியை கடைசி வரை நின்று முடித்து வைப்பவராக இனியும் கருதக்கூடாது. அவரை போட்டிகளை அனுபவித்து ஆட விட வேண்டும். இளம் வீரர்களை நிலைத்து ஆடி போட்டியை முடித்து வைக்க தயார் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

நடுவரிசை மோசம்

நடுவரிசை மோசம்

இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. இது இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் என அனைத்திலும் வெளிப்பட்டது.

ஸ்ட்ரைக் ரேட் மிக மிக குறைவு

ஸ்ட்ரைக் ரேட் மிக மிக குறைவு

அதிலும் தோனி நிறைய பந்துகளை வீணடிப்பதால், அது கடைசியாக ஆட வரும் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையாக உள்ளது. மேலும், தோனி இந்த ஆண்டில் இது வரை 10 இன்னிங்க்ஸ்களில் 225 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 28.13. இதில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 67.37 என உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்த ஸ்ட்ரைக் ரேட் மிக மிக குறைவு.

விக்கெட் கீப்பிங் சூப்பர்

விக்கெட் கீப்பிங் சூப்பர்

பேட்டிங் மட்டுமே தோனிக்கு பின்னடைவாக உள்ளது. விக்கெட் கீப்பிங் மற்றும் தன் அனுபவத்தால் அணிக்கு உதவுவது போன்றவற்றில் சிறந்து விளங்குவதால் தோனியை அவ்வளவு எளிதில் அணியில் இருந்து நீக்கிவிட முடியாது. எனினும், அவரது பேட்டிங்கை சீக்கிரம் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், விமர்சனங்கள் வளர்ந்து கொண்டே செல்லும்.

Story first published: Wednesday, October 3, 2018, 12:41 [IST]
Other articles published on Oct 3, 2018
English summary
India can’t depned on Dhoni to finish matches says Anil Kumble. He supports Dhoni to play games with freedom.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X