Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம டீம் ஆடுவதை வைத்து பார்த்தால், அடுத்த டி20 உலக கோப்பை நமக்குத்தான்.. ஸ்ரீகாந்த்

ஹைதராபாத்: டி20 கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், "இந்திய அணி எப்போதுமே டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடும். அதே பாணியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுள்ளது.

India can win Twenty20 World Cup, says Srikkanth

மொகாலியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா எளிதில் வென்றது. இது இந்திய அணி வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கும். பெங்களூரில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா சிறப்பாக ஆடியது.

இந்திய அணி முதல் நாளிலேயே தனது ஆதிக்கத்தை காண்பித்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி டிரா ஆகிவிட்டது. ஐந்து நாள் டெஸ்ட் போட்டியில் 3 நாட்கள் மட்டும் கிடைத்திருந்தாலே போதும், இந்தியா வெற்றிபெற்றிருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன.

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

Story first published: Thursday, November 19, 2015, 10:21 [IST]
Other articles published on Nov 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+