Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்சர் பட்டேலால் அணியின் பலம் கூடுகிறது.. சூர்யகுமாருக்கு நல்ல வேல பந்துவீசல..கேப்டன் ஹர்திக் பேச்சு

ராஜ்கோட் : இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கு வென்ற இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து பதினோராவது முறையாக டி20 தொடரை வென்றது.

கடைசி ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் 112 ரன்களை விளாசி சாதனை படைத்தார். தொடரை வென்றது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுவதை தற்போது காணலாம்.

ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய பேட்டிங் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே வருகிறது.

பந்துவீசவில்லை

பந்துவீசவில்லை

பேட்டிங் எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள் என்று அனைவருக்கும் சொல்வது போல் அமைந்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா அவருக்கு நல்ல வேலை நான் பந்து வீசவில்லை. அப்படி நான் பவுலிங் செய்தால் அவர் அடிக்கும் வேகத்தை பார்த்து நான் நிச்சயம் மனம் உடைந்து போய் இருப்பேன். ராகுல் திருபாதிக்கும் என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அவர் விளையாடிய போது பந்து நன்றாக ஸ்விங் ஆனது.

பேட்டிங்கில் மேஜிக்

பேட்டிங்கில் மேஜிக்

ஆனால் திரிபாதி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதன் பிறகு சூரியகுமார் யாதவும் மேஜிக் செய்தார். சூரியகுமார் யாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பாக பயிற்சி செய்து வருகிறார். அவர் எப்படி விளையாட வேண்டும் என்று நாங்கள் ஏதும் அவருக்கு சொல்லத் தேவையில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். ஏதாவது சூழலில் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றால் மட்டுமே சூரியகுமார் எங்களிடம் பேசுவார். அதேபோன்று அக்சர் பட்டேல் ஆட்டத்தை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

கூடுதல் பலம்

கூடுதல் பலம்

பேட்டிங் வரிசையில் இறுதியில் வந்து அக்சர் அதிரடியாக விளையாடுகிறார். இந்த தொடர் எல்லாம் நிச்சயம் அவருக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கும்.அக்சர் பட்டேலில் இந்த செயல்பாடு நிச்சயம் அணிக்கு கூடுதல் பலத்தை தருகிறது. கேப்டனாக என்னுடைய குறிக்கோள் எப்போதுமே வீரர்களுக்கு ஆதரவாக இருப்பேன். நான் எப்போதுமே கூறுவது இதை தான், நாட்டில் உள்ள சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்கள் தான் தற்போது அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

50 சதவீதம் கூட இல்லை

50 சதவீதம் கூட இல்லை

எனவே அவருடைய திறமையை நினைத்து அவர்கள் சந்தேகப்பட தேவையே இல்லை. நாங்கள் ஒவ்வொரு வீரர்களும் அவர்களுடைய சோதனை காலத்திலும் ஆதரவாக இருப்போம். இந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கிறது. இரண்டாவது டி20 ஆட்டத்தில் நாங்கள் எங்களுடைய 50 சதவீத ஆட்டத்தை கூட வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று நாங்கள் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். இது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 7, 2023, 23:25 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+