Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் உலகில் எந்த கேப்டனும் செய்யாத சாதனை.. கோலி உருவாக்கிய புதிய சகாப்தம்.. அதிரும் சென்னை!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி மாபெரும் சாதனைகளை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

எப்படி

எப்படி

இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் அக்சர் பட்டேல் 5 விக்கெட் எடுத்து கலக்கி இருக்கிறார்.

சாதனை

சாதனை

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி மாபெரும் சாதனைகளை படைத்துள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக தோனி 21 வெற்றிகளை பெற்றுள்ளார்.

சமன்

சமன்

தற்போது அதே சாதனையை கோலியும் செய்து தோனியை சமன் செய்துள்ளார். அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்டில் வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி நிகழ்த்தி உள்ளார். இங்கிலாந்தை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும்.

கேப்டன்

கேப்டன்

அதேபோல் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது இன்று அவரின் டீம் 1000வது விக்கெட்டை எடுத்துள்ளது. இன்று பென் போக்ஸ் விக்கெட்தான் கோலியின் கேப்டன்சியின் கீழ் விழுந்த 1000வது விக்கெட் ஆகும்.உலகில் 5 கேப்டன்கள் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.

Story first published: Tuesday, February 16, 2021, 13:05 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+