அந்த தில்லு எனக்கு பிடிச்சிருக்கு.. இவர மாதரி ஆள் தான் வேணும்..! ரோகித் பாராட்டு மழையில் தமிழக வீரர்
கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.
இந்த நிலையில், போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் இந்திய வீரர்கள் கேட்ச்சை விட்டது ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாகவும், அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

பயமாக இருந்தது
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடினாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கும்.போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தெரியும். வெற்றி இந்த ஆட்டத்தில் எளிதாக கிடைக்காது. அழுத்தமான கட்டத்தில் எங்கள் அணி வீரர்கள்,யுத்திகளை சிறப்பாக கையாண்டனர் என்று பாராட்டினார்.

புவனேஸ்வருக்கு பாராட்டு
புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இது ஆட்டத்தின் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதற்கு பாராட்டு தெரிவித்த ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார் அணிக்கு முக்கியமானவர். இதே போன்று பல போட்டிகளில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளதாக ரோகித் சர்மா கூறினார்.

கோலி குறைத்தார்
விராட் கோலி சிறப்பாக விளையாடியதாக பாராட்டிய ரோகித், என் மீது இருந்த அழுத்தத்தை கோலி குறைத்துவிட்டதாக கூறினார். ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியாக ஆடி, ரன்களை குவித்ததால் தான் வெற்றி பெற முடிந்ததாக ரோகித் சர்மா கூறினார்.
Recommended Video

தமிழக வீரருக்கு பாராட்டு
குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் நெருக்கடியான கட்டத்தில் என்னிடம் வந்து எனக்கு ஓவர் வீச வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டார். அவருடைய தைரியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது போன்று தில்லு இருக்கிற வீரர்கள் தான் அணிக்கு தேவை. சுமைகளை கண்டு ஒளிந்து கொள்ளாமல், தோளில் சுமக்க தயாராக இருந்தார் வெங்கடேஷ் ஐயர்.


Click it and Unblock the Notifications