Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோற்றாலும் பரவாயில்லை..அணிக்காக இதை செய்வேன்..! தொடக்க வீரராக ரிஷப்- பின்னணி என்ன? ரோகித் ஓபன் டாக்

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் தொடர்ந்து 11 வது முறையாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது. இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா,

திருப்புமுனை

திருப்புமுனை

ஆட்டத்தின் தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம். இருப்பினும் சூர்யகுமார் யாதவ் - கே.எல். ராகுல் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் தான் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இருவரின் ஆட்டமும், முதிர்ச்சியாக இருந்தது. இதனை தான் அணி நிர்வாகம், அந்த வீரர்களிடம் எதிர்பார்க்கிறது. நெருக்கடியான கட்டத்தில் எப்படி விளையாடுகிறார்கள் என்பது பொருட்டே அவர்கள் திறமை கணக்கிடப்படும்.

வித்தியாசமான முயற்சி

வித்தியாசமான முயற்சி

பிரஷித் கிருண்ணா அபாரமாக பந்துவீசினார். இந்தியாவில் இது போல் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் பந்துவீசியதை பார்த்து நீண்ட காலமாக ஆகிவிட்டது என்று கூறினார். ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கியது பற்றி கேள்விக்கு பதில் அளித்த ரோகித், இது போன்ற வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ள தான் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

ஷிகர் தவான் ரிட்டன்ஸ்

ஷிகர் தவான் ரிட்டன்ஸ்

இந்த முயற்சி வெறும் ஒரு போட்டிக்கு மட்டும் தான். ஷிகர் தவான் அடுத்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்பும், உரிய நேரமும் வழங்குவது முக்கியம். அடுத்த போட்டியில் யாருக்கு வாய்ப்பு வழங்கவது என்பது குறித்து அணி நிர்வாகத்துடன் சேர்ந்து முடிவு எடுப்போம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவது பற்றி ஆலோசிக்கப்படும்.

கவலை இல்லை

கவலை இல்லை

அணியை தயார் செய்ய பல வித்தியாசமான முயற்சிகளை எடுப்பது அவசியம். அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக தோற்பது குறித்து கவலை இல்லை. எங்களுடைய திட்டமே எதிர்காலத்தை பற்றி, நீண்ட பயணத்தை பற்றி, அதற்கான அணியை தான் உருவாக்குகிறேன். களத்தில் எனக்கு வீரர்கள் உதவி செய்கின்றனர். தொடரை வென்று மகிழ்ச்சி அளிக்கிறது.

Story first published: Wednesday, February 9, 2022, 22:35 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+