Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி! சாதித்த கோஹ்லி அணி

கொழும்பு: இலங்கையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று 22 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், அந்த ஏக்கத்தை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று நீக்கி வைத்துவிட்டது. இலங்கையை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வசமாக்கியுள்ளது இந்தியா.

விராட் கோஹ்லி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான பிறகு, வங்கதேசத்துடனான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்தியா ஆடியது. இந்தியாவின் ஆதிக்கம் ஓங்கியிருந்தாலும்கூட, மழை காரணமாக டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

3 போட்டிகள்

3 போட்டிகள்

இந்நிலையில், இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி சுற்றுப் பயணம் செய்தது. ஆகஸ்ட் 12ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கியது. முதல் டெஸ்டில் இந்தியா கடைசி நேரத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. 2வது மற்றும் இன்று முடிந்த 3வது டெஸ்ட்டுகளை இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று பழி தீர்த்தது.

அசாருதீன்

அசாருதீன்

இலங்கையில் கடைசியாக இந்திய அணி 1993ம் ஆண்டுதான் டெஸ்ட் தொடரை வென்றது. அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இதன்பிறகு 5 முறை அந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஆடியுள்ள இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இருந்தது. இந்நிலையில்தான், கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 22 ஆண்டுகால தாகத்தை தணிக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதை கோஹ்லி அணி தீர்த்து வைத்துள்ளது.

முதல் பயணம்

முதல் பயணம்

இந்தியா 1985ம் ஆண்டு முதல் முறையாக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போதைய உலக சாம்பியனாக இந்தியா இருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது.

முதல் வெற்றி

முதல் வெற்றி

1993ம் ஆண்டு 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா. இதன்பிறகு 1997ல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆடியது. இரு போட்டிகளுமே டிராவில் முடிந்தது. இந்த தொடரின்போது முழுக்க இலங்கை கையே ஓங்கியிருந்தது. ஒரு டெஸ்ட் இன்னிங்சில் சனத் ஜெயசூர்யா 340 ரன்கள் குவித்து இந்திய பவுலிங்கை திணறடித்தார். ரன் குவிக்கும் ஆர்வத்தில் வெற்றி பெற இலங்கை முயலாததால் போட்டித் தொடர் டிராவில் முடிந்தது.

டிராவில் முடிந்தது

டிராவில் முடிந்தது

1999ம் ஆண்டு நடைபெற்ற 1 ஆட்டம் கொண்ட ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி டிராவில் முடிந்தது. 2001ல் 3 டெஸ்ட் தொடரில் ஆடிய இந்தியா 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2008ல் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிய இந்தியா, 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2010ல் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Story first published: Wednesday, September 2, 2015, 8:52 [IST]
Other articles published on Sep 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+