Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரதமர் மோடி சொன்னதை செய்யலையே…! ரொம்ப, ரொம்ப லேட் பண்ணிட்டிங்களே கோலி

மும்பை: லோக்சபா தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வேறு இடங்களில் வாக்களிக்க விரும்புவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதாவது அவர்கள் ஆன் லைன் வழியாக அதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மார்ச் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது.

இந்திய கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மும்பையில் வொர்லி பகுதியில் வசித்து வருகிறார். அனுஷ்கா சர்மாவிற்கு மும்பையில் ஓட்டு உள்ளது.

பதிவு செய்ய விருப்பம்

பதிவு செய்ய விருப்பம்

அதனால் விராட் கோலியும் தனது வாக்கை மும்பையில் பதிவுசெய்ய விருப்பம் தெரிவித்தார். அதற்காக ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு பதிவு செய்துள்ளார்.

ஆன்லைன் கெடு

ஆன்லைன் கெடு

வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வேறு இடங்களில் வாக்களிக்க விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மார்ச் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. ஆனால், விராட் கோலி தாமதமாக ஆன்லைனில் பதிவு செய்து உள்ளதால் அவரது விண்ணப்பத்தை தேர்தல் ஆணையைம் நிலுவையில் வைத்துள்ளது.

விண்ணப்பம் தாமதம்

விண்ணப்பம் தாமதம்

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மூத்த அதிகாரி கூறியதாவது: விராட் கோலியின் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. ஆனால், அவர் தாமதமாக விண்ணப்பித்துள்ளார்.

வாக்களிக்க முடியாது

வாக்களிக்க முடியாது

நடப்பு லோக்சபா தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாது. வரும் தேர்தல்களில் அவர் வாக்களிக்க முடியமா என்பதை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மும்பை தெற்கு தொகுதிக்கு வரும் 29-ம் தேதி தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 27, 2019, 22:12 [IST]
Other articles published on Apr 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+