
மேற்கு இந்தியத் தீவுகளுடன்
மேற்கு இந்தியத் தீவுகள் ஏ அணிக்கும், இந்திய ஏ அணிக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி 20 போட்டி நடைபெறவுள்ளது.

யுவராஜ் தான் கேப்டன்
இந்தத் தொடருக்கான இந்திய ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் யுவராஜ் சிங்.

எல்லாப் போட்டிகளுமே சின்னச்சாமியில்தான்
நான்கு போட்டிகளுமே பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன.

செப்டம்பர் 15ம் தேதி முதல் போட்டி
செப்டம்பர் 15ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. 17ம் தேதி 2வது போட்டியும், 19ம்தேதி மூன்றாவது போட்டியும் நடைபெறும். செப்டம்பர் 21ம் தேதி டுவென்டி 20 போட்டி நடைபெறும்.

தீவிரப் பயிற்சியில் யுவராஜ்
இந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்காக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரப் பயிற்சியில் இறங்கியுள்ளார் யுவராஜ் சிங்.

இதுதான் இந்திய அணி
இந்திய அணி விவரம் - யுவராஜ் சிங், பாபா அபராஜித், ராபின் உத்தப்பா, உன்முக்த் சந்த், கேதர் ஜாதவ், நமன் ஓஜா, யூசுப் பதான், இர்பான் பதான், பிரவீன் குமார், சுமித் நர்வால், ஷாபாஷ் நதீம், மந்தீப் சிங், ராகுல் சர்மா.


Click it and Unblock the Notifications











