Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs. பாகிஸ்தான் லெஜண்ட்ஸ்.. யுவராஜ் சிங் தலைமையில் இந்திய அணி.. போட்டி எப்போது?

மும்பை: ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 3-வது சீசன் வரும் அக்டோபர் 3 முதல் 18 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி வரும் அக்டோபர் 10 அன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்தியா சாம்பியன்ஸ் அணியில் யுவராஜ் சிங் கேப்டனாக செயல்பட உள்ளார். சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9:00 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 2025 சீசனில், எல்லைப் பதற்றம் காரணமாக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்துவிட்டனர். இதனால் லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டி என இரண்டு முறையும் போட்டிகள் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டன.

India Champions vs Pakistan Champions in WCL 2026 Schedule Announced for Dubai Clash

இந்திய அணியில் ஷிகர் தவான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுடன் ஆட முடியாது என்பதில் உறுதியாக இருந்தனர். இந்த சூழலில், மீண்டும் அக்டோபர் 10 அன்று இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் அட்டவணையில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை இந்திய வீரர்கள் களமிறங்குவார்களா அல்லது பழைய சர்ச்சை மீண்டும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை, 2026 மகளிர் ஆசிய உலகக்கோப்பை ஆகிய போட்டிகளில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடி இருப்பாதால் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

நடப்பு 2026 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வங்கதேசம் ஆகிய 7 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் பிரித்து நடத்தப்பட உள்ளன.

உலகையே மிரளவைத்த சிறந்த பவுலிங் ஸ்பெல்.. 25 வருடமாக எந்த பவுலரும் தொட முடியாத சமிந்தா வாஸ் சாதனை

உலகையே மிரளவைத்த சிறந்த பவுலிங் ஸ்பெல்.. 25 வருடமாக எந்த பவுலரும் தொட முடியாத சமிந்தா வாஸ் சாதனை

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 3 அன்று ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 4 அன்று இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. தொடர்ந்து அக்டோபர் 6-ல் தென்னாப்பிரிக்கா, அக்டோபர் 10-ல் பாகிஸ்தான், அக்டோபர் 11-ல் வங்கதேசம் மற்றும் அக்டோபர் 13-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் மோதுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் அக்டோபர் 16 அன்றும், இறுதிப்போட்டி அக்டோபர் 18 அன்றும் நடைபெறவுள்ளன.

Story first published: Saturday, September 12, 2026, 14:52 [IST]
Other articles published on Sep 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+