Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டி 'டை'யில் முடிந்தது!

ஆக்லாந்து: ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தது.

இன்று டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பீல்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

20 ரன்னில் வெளியேறிய ரைடர்

20 ரன்னில் வெளியேறிய ரைடர்

அந்த அணியின் தொடக்க வீரர் ரைடர் 20 ரன்னில் வெளியேற பின்னர் வந்த வில்லியம்சன், குப்திலுடன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். வில்லியம்சன் 65 ரன் எடுத்திருந்தபோது ஷமி பந்தில் அவுட் ஆனார்.

குப்தில் சதம்

குப்தில் சதம்

பின்னர் அதிரடி ஆட்டக்காரரான ஆண்டர்சன் 8 ரன்னில் வெளியேறினார். டெய்லர் 17 ரன்னிலும், மெக்குல்லம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் அபாரமாக விளையாடி குப்தில் தனது 5வது சதத்தை நிறைவு செய்தார். 111 ரன் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்தில் அவர் அவுட் ஆனார்.

314 ரன்கள் குவிப்பு

314 ரன்கள் குவிப்பு

50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் குவித்தது.

ஜடேஜா, ஷமி 2 விக்கெட்டுகள்

ஜடேஜா, ஷமி 2 விக்கெட்டுகள்

இந்தியா தரப்பில் ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், ஆரோன், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இந்திய அணி ஆடியது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். ரோகித் சர்மா 39 ரன்களையும் தவான் 28 ரன்களையும் எடுத்தனர்.

சீக்கிரம் அவுட் ஆன கோஹ்லி

சீக்கிரம் அவுட் ஆன கோஹ்லி

இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் கோஹ்லில் 6 ரன்களே எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதேபோல் ரஹானே 3 ரன்களில் அவுட் ஆனார்.

டோணி அரைசதம்

டோணி அரைசதம்

சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோணி இருவரும் நிலைத்து ஆடினர். டோணி 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அசத்திய அஸ்வின் - ஜடேஜா

அசத்திய அஸ்வின் - ஜடேஜா

பின்வரிசை வீரர்கள் சொதப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அஸ்வினும் ஜடேஜாவும் அசத்தினர். அஸ்வின் 65 ரன்கள் எடுத்தார்.

பரபர கடைசி ஓவர்

பரபர கடைசி ஓவர்

ஜடேஜா நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்திய அணி வெல்ல 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அந்த பந்தில் ஜடேஜா ஒரு ரன் அடிக்க இந்திய அணி 314 ரன்களை எட்டியது.

டையில் முடிந்தது

டையில் முடிந்தது

50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை எடுத்தது. இதனால் இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.

நியூசிலாந்து முன்னிலை

நியூசிலாந்து முன்னிலை

5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகளில் நியூசிலாந்து வென்றுள்ளதன் மூலம் அந்த அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Story first published: Saturday, January 25, 2014, 15:28 [IST]
Other articles published on Jan 25, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+