3வது டெஸ்ட்.. தள்ளி போடப்பட்ட இந்திய அணியின் வெற்றி.. டாப் 5!
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களும்,இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களையும் (டிக்ளேர்) எடுத்தது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்துள்ளது.
நான்காம் நாள் போட்டியின் டாப் 5 நிகழ்வுகள்
1 நம்பிக்கை அளித்த முதல் செஷன்
நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் விழுந்தன. இங்கிலாந்து அணி தனது முதல் செசனில் 4 விக்கெட்களை இழந்தது குறிப்பிடத்தக்கது
2 ராகுலின் டெலி அல்லி கொண்டாட்டம்
இந்திய வீரர் கேஎல் ராகுல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் கேட்சை பிடித்தபோது டெலி அல்லி செலிபிரேஷன் முறையில் கொண்டாடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது.
3 பட்லரின் பொறுப்பான முதல் சதம்
இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஜோஸ் பட்லர் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். அவர் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 169 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அவர் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 84 ரன்கள் பௌண்டரிகளுடன் மூலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 ஸ்டோக்சின் நிதானமான அரைசதம்
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 62/4 என்று தத்தளித்த போது இவர் பட்லருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
5 பும்ராவின் 5 விக்கெட்கள்
இந்திய அணியின் ஜஸ்ப்ரிட் பும்ரா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசிய அவர் பட்லர் மற்றும் பைர்ஸ்டாவ் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தியது இப்போட்டியில் இந்திய அணிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, August 22, 2018, 10:16 [IST]
Other articles published on Aug 22, 2018


Click it and Unblock the Notifications