Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை பதவியில் இருந்தாலும் 'கோச்' பணியில்தான் கவனம்.. சர்ச்சைகளுக்கு கும்ப்ளே பதிலடி

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் கும்ளே, இப்போது, தான் வகித்துவரும் பிற பணிகளில் ஆர்வம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக பதவி வகிப்பதையும், டென்விக் என்ற விளையாட்டு ஆலோசனை நிறுவனத்தின் பதவியில் இருப்பதையும் சுட்டி காட்டி சர்ச்சைகள் வெடித்தன.

இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து, வார இதழ் ஒன்றுக்கு கும்ப்ளே அளித்த பேட்டி விவரம்:

ஐஐசி-யில் தொடர்வேன்

ஐஐசி-யில் தொடர்வேன்

தொடர்ந்து ஐஐசி கிரிக்கெட் கமிட்டியின் சேர்மனாக நீடிபேன். ஐஐசி கமிட்டி கிரிக்கெட் சேர்மன் பதவியைப் பொறுத்தரை, நான் அங்கு அதிக நேரம் செலவு செய்யப்போதில்லை. ஐஐசி கிரிக்கெட் கமிட்டி சேர்மனாக நீடிக்கக்கூடாது என்பதற்கான சொல்லத் தகுந்த காரணங்கள் ஏதுவும் இல்லை. மற்ற நாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்களான டேரன் லீமேன், (ஐசிசி கிரிக்கெட் கமிட்டி) ஆண்ட்ரிவ் ஸ்ட்ராஸ் (இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர்) ஆகியோர் இரு பதவிகளை வகித்து வருவது அறிந்ததே.

கடைசி நாளுக்கு முன்பே விண்ணப்பித்தேன்

கடைசி நாளுக்கு முன்பே விண்ணப்பித்தேன்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு உள்ள காலக்கெடு முடிவடையும் முன்பே நான் விண்ணப்பித்து விட்டேன். இருந்த போதிலும், நான் காலக்கெடு முடிந்த பின்னர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியானது ஆச்சர்யமாக உள்ளது.

அனைவரும் பங்கேற்க வேண்டும்

அனைவரும் பங்கேற்க வேண்டும்

அனில் கும்ளே பிசிசிஐ-யின் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமணம் ஆகியோரால் இன்டர்வியூ செய்யப்பட்ட பின்னரே பயிர்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், 2019-ல் நடைபெறவுள்ள உலகக்கோப்பையை இந்திய அணி பெறும் வகையில் வழிநடத்த வேண்டும். அதற்கு வீரர்களை தயார் படுத்த வேண்டும். பங்குதாரர்கள், தேர்வாளர்கள், ஜுனியர் வீரர்கள் மற்றும் ஜுனியர் அணியின் பயிற்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

புதிய அனுபவம்

புதிய அனுபவம்

என்னுடன் விளையாடிய முன்னாள் வீரர்கள் என்னை இன்டர்வியூ செய்தது கொஞ்சம் புது விதமாக தான் இருந்தது. ஏனென்றால் முன்னதாக நாங்கள் அனைவரும் இணைந்து பல கூட்டங்களில் ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.

லட்சியம்

லட்சியம்

எந்த நிலையிலும் இந்திய அணியை அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த அணியாக பார்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம். ஒரு சிறந்த அணி என்பது உள்நாட்டில் மட்டும் வெற்றிபெறும் அணியாக திகழாமல், அனைத்து நாடுகளிலும் வெற்றி பெறும் அணியாக திகழ வேண்டும்.

முதலில் வீரர்களே

முதலில் வீரர்களே

ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் அனைத்து தரப்பினரிடமும் அது குறித்து ஆலோசிக்கப்படும். பயிற்சியாளர் பதவி என்பது இரண்டாவது பட்சம் தான், முதலில் வீரர்களே முன்னுரிமை. ஆதலால் நான் தனியாக இருந்து இருந்து முடிவு எடுக்கமுடியாது. அனைத்து வீரர்களின் கருத்துகளை கேட்டு, அதற்காக வழியை தயார் படுத்துவதே சிறந்தது. ஒரு முடிவை செயல்படுத்த வேண்டுமானால் அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் முக்கியம், அப்போது தான் அந்த முடிவை செயல்படுத்த முடியும்.

கூட்டணி

கூட்டணி

சிஏசி-யில் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், சவுரவ் கங்குலி ஆகியோர் நிர்வாகிகளாக இருப்பதது, மற்றும் டிராவிட் இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளராக இருப்பது உள்ளிட்டவை சிறந்த விஷயம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அணிக்கு பல்வேறு வகையில் எங்களது பங்களி்பை செய்வோம்.

எனது முடிவு தான்

எனது முடிவு தான்

பயிற்சியாளர் பதவிக்கு நானாக தான் விண்ணப்பித்தேன். என்னை யாரும் விண்ணப்பிக்க தூண்டவில்லை. இது தான் கிரிக்கெட்டில் எனது பங்களிப்பை கொடுப்பதற்காக சிறந்த நேரம் என உணர்ந்தேன், அதற்காகத்தான் மீண்டும் விளையாட்டுக்குள் புகுந்துவிட்டேன்.

குடும்பத்தோடு குதுகலம்

குடும்பத்தோடு குதுகலம்

சவால்களை எதிர்கொள்ள நான் எப்போதும் முயற்சிப்பேன். பயிற்சியாளர் பதவிக்கு நான் விண்ணப்பித்தது எனது குடும்பத்தின் முடிவே. எனது மனைவி தான் எனக்கு மிகவும் ஆதரவு தெரிவித்தார். கிரிக்கெட் வாழ்கையில் இருந்து ஓய்வு பெற்றது சிறிய இடைவேளையாகவே கருதுகிறேன். இந்த சமயத்தில் நான் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் எனது குடும்பத்தோடு விடுமுறைகளை கழித்தேன். மேலும், அடுத்தது என்ன செய்லாம் என நான் எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பேன், அந்த சமயத்தில் பிசிசிஐ விளம்பரத்தை பார்க்க நேரிட்டது என்று கும்ளே தெரிவித்தார்.

Story first published: Wednesday, June 29, 2016, 14:49 [IST]
Other articles published on Jun 29, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+