Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபிஷேக் சர்மாவை பேருந்திலே வைத்து திட்டிய இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர்.. என்ன நடந்தது?

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவுடன் கோபமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இது அரங்கேறியது. அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியது ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது. இதனால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளன.

சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள், விமான நிலையத்திலிருந்து அணிப் பேருந்தில் ஏறியபோது இக்காட்சி பதிவானது. ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தலைமைப் பயிற்சியாளர் கம்பீர், துவக்க வீரர் அபிஷேக் சர்மாவுடன் தீவிரமாக உரையாடினார். இந்த உரையாடல் காணொலி உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர் ஒருவர், "கௌதம் கம்பீர் அங்கு அணிப் பேருதிலேயே அபிஷேக் சர்மாவுக்குப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் ஐயா, கேமராக்களுக்கு முன்னால் இந்த நாடகத்தை நிறுத்துங்கள். ஒரு வீரருக்கு எப்படி விளக்க வேண்டும், அவர்களின் நம்பிக்கையை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களில் சிறந்ததை எப்படி வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதை ரோஹித் ஷர்மாவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுடனான சூப்பர் 8 மோதலில், அணி நிர்வாகத்தின் நம்பிக்கை இருந்தபோதிலும் அபிஷேக் சர்மா தனது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். இலக்கை துரத்தியபோது, ஒரு பவுண்டரி அடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவர், 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முடிவில், இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வி அணியின் துவக்க வரிசை குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.

அரையிறுதி வாய்ப்புகளை தக்கவைக்க சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேயுடனான அடுத்தப் போட்டி இந்தியா களமிறங்குகிறது. இதில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற கட்டாயப் போட்டியாக மாறியுள்ளது. பிப்ரவரி 26 அன்று எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அணியின் துவக்க வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது அணி நிர்வாகத்திற்கு முக்கியமான சவாலாக அமைந்துள்ளது.

Story first published: Tuesday, February 24, 2026, 7:40 [IST]
Other articles published on Feb 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+