Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டு தவறுகளால் மொத்தமாக போச்சு..தோல்வி குறித்து டிராவிட் கருத்து..சீனியர்களுக்கு மறைமுக எச்சரிக்கை

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி பறிகொடுத்தது.

Recommended Video

England கிட்ட India தோல்வி அடைய இதான் காரணம்... Rahul Dravid கொடுத்த விளக்கம் *Politics

கடைசி இன்னிங்சில் இந்திய அணி முதல் முறையாக 378 ரன்களை விட்டு கொடுத்து தோல்வியை தழுவியது.

தோல்விக்கு காரணங்கள் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களிடம் விளக்கமாக எடுத்து கூறினார்.

3 நாள் ஆதிக்கம்

3 நாள் ஆதிக்கம்

நாங்கள் இந்தப் போட்டியில் முதல் 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எங்களால், அதே உத்வேகத்தை போட்டி முழுவதும் வெளிப்படுத்த முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பாரிஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப்களை அமைத்தனர்.

தொடரும் ஏமாற்றம்

தொடரும் ஏமாற்றம்

எங்களுக்கு கிடைத்த இரண்டு, மூன்று வாய்ப்புகளை எங்களால் சரியாக பயன்படுத்த முடியவில்லை. இதே போன்று தென்னாப்பிரிக்காவிலும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல எங்களுக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது. அதனையும் தவறவிட்டோம். இது நிச்சயம் ஏமாற்றடததை தான் தருகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.

செய்ய முடியவில்லை

செய்ய முடியவில்லை

நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் எதிரணியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினோம். அதனை தான் எங்களால் கடந்த 2 மாதங்களாக செய்ய முடியவில்லை. இதற்கு உடல் தகுதியை சரிவர பின்பற்ற முடியாமல் போனது கூட காரணமாக இருக்கலாம். பேட்டிங் தற்போது பெரிய சிக்கலாக இருக்கிறது. கடைசியாக வெளிநாட்டில் விளையாடிய 2 டெஸ்டிலும் இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பினோம்.

மறைமுக எச்சரிக்கை

மறைமுக எச்சரிக்கை

பேட்டிங்கில் சிறப்பாக தொடங்கிவிட்டு, அதனை முடிக்க முடியாமல் தடுமாறுகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் சில விசயங்களை கற்கிறோம். அடுத்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் இந்திய துணை கண்டத்தில் தான் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் வீரர்களின் செயல்பாடுகளை பயிற்சியாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று டிராவிட் கூறினார்.

Story first published: Tuesday, July 5, 2022, 22:40 [IST]
Other articles published on Jul 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+