பெங்களூரு : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டொமினிக்காவில் விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட்டை தவிர வேறு யாரும் தற்போது இடம் பெற்றிருக்கும் இந்திய அணியில் விளையாடியதில்லை.
இதில் ராகுல் டிராவிட் தற்போது பயிற்சியாளராக பதவி வகிக்கிறார். டிராவிட் எப்போதுமே அமைதியின் உருவமாக காட்சியளிப்பார். நூற்றுக்கணக்கான போட்டிகளில் டிராவிட் விளையாடி இருந்தாலும் ஓரிரு முறைதான் களத்தில் கோபப்பட்டு இருக்கிறார்.

ஆனால் ராகுல் டிராவிட் கோபப்பட்டு கண்ணாடியை உடைத்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது எப்படா நடந்தது என்று பதற வேண்டாம். டிராவிட் கோபமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வைத்து ஒரு விளம்பரம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று. இதில் ராகுல் டிராவிட் இந்திரா நகரின் ரவுடி நான் என்று கூறி பேட்டால் வாகனங்களின் கண்ணாடியை உடைப்பார்.
இது குறித்து தற்போது மனம் திறந்து உள்ள டிராவிட் அந்த விளம்பரம் பார்த்ததிலிருந்து பலரும் என்னை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். நான் எப்போது கோபப்பட்டு அதை போல் வெடிப்பேன் என்று அனைவரும் யோசிக்க தொடங்கி விட்டார்கள். அந்த விளம்பரம் நடித்தது நன்றாக இருந்தது. பலரும் இதனை வரவேற்றார்கள். ஆனால் என்னுடைய தாய்க்கு மட்டும் தான் இது பிடிக்கவில்லை.
நான் கண்ணாடியை அடித்து உடைப்பது போல் நடித்ததற்கு என் தாய் நீயா அப்படி செய்தாய் என்று என்னிடம் கேட்டார். நான் அவ்வாறு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறி வருகிறார். இந்த விளம்பரத்தில் நடிக்க என்னை பல ஆண்டுகளாக கேட்டிருந்தார்கள்.
முதன்முதலாக எனக்கு நடிக்கும் போது மிகவும் வெட்கமாக இருந்தது. மும்பையின் தெருவில் நடுவில் நான் விளம்பரத்திற்காக கத்தி கொண்டு இருந்தேன். அப்போது என்னை சுற்றி துணை நடிகர்கள் தான் இருந்தார்கள். எனினும் எனக்கு நடுரோட்டில் அப்படி நின்று கத்தி கொண்டு இருந்தது வெட்கமாக இருந்தது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.