For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்க 2 பேரின் செயல்பாட்டை யாரும் கண்டுக்க கூட மாட்றாங்க? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனை

கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 8வது வெற்றியை பெருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய மட்டும் தான் உலகக்கோப்பை தொடரில் தோல்வியே பெறாமல் விளையாடி இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கும் நோக்கில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் பாதையில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

India coach Rahul dravid says this 2 cricketers performance went unnotice in world cup

விராட் கோலி, ரோகித் சர்மா, கில், கே எல் ராகுல் ஆகியோர் பேட்டிங் மூலம் வெற்றியை பெற்று தந்தார்கள். கடைசி சில போட்டிகளாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் சிம்ம சொப்பனமாக இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் , இந்திய அணியில் ஒரு சிலர் சிறப்பாக செயல்பட்டும், ரசிகர்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர் இந்த தொடர் மிகவும் வெற்றிகரமாக எங்களுக்கு அமைந்து இருக்கிறது. ஜடேஜா போன்ற வீரரின் செயல்பாட்டை பாருங்கள். அவர் எவ்வளவு ரன் அடித்திருக்கிறார். எவ்வளவு விக்கெட்டை எந்த கட்டத்தில் எடுத்திருக்கிறார் என்பதை எல்லாம் பாருங்கள். இது இந்த தொடரில் மிகப்பெரிய செயல்பாட்டாக எனக்கு தெரிகிறது.

எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். இதனால் ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் செயல்பாடுகள் ரசிகர்களால் கண்டுகொள்ளாமல் செல்லப்படுகிறது. ஜடேஜா போன்ற வீரர் பனிப்பொழிவால் பந்து ஈரமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் செயல்படுகிறார்கள். எங்களுக்கு நடு ஓவர்களில் தேவையான விக்கெட்டையும் எதிரணியின் ரன் குவிக்கும் வேகத்தையும் ஜடேஜா குறைக்கிறார்.

நீங்கள் பேட்டிங்கில் முதல் மூன்று இடத்தில் இருந்தால் உங்களுக்கு எப்போதுமே சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் பேட்டிங் வரிசையில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் விளையாடும் வீரர்களுக்கு எப்போதாவது தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் அந்த வாய்ப்புகள் கிடைக்காது. அப்படி வாய்ப்பு வரும்போது எல்லாம் ஜடேஜா எங்கள் அணிக்காக பல முக்கிய ஆட்டத்தை விளையாடி இருக்கிறார்.

சில போட்டியில் 30 ரன்கள் அடித்திருந்தால் அது அணியின் ஸ்கோருக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. மேலும் அவருடைய பில்டிங் எப்போதும் போல் பிரமாதமாக இருக்கிறது. ஒரு வீரராக ஜடேஜா அனைத்தையும் எங்களுக்கு தருகிறார். ஆனால் மற்ற வீரர்களின் செயல்பாட்டால் ஜடேஜாவின் செயல்பாடு ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது என்று டிராவிட் கூறினார்.

Story first published: Sunday, November 5, 2023, 6:55 [IST]
Other articles published on Nov 5, 2023
English summary
India coach Rahul dravid says this 2 cricketers performance went unnotice in world cup இவங்க 2 பேரின் செயல்பாட்டை யாரும் கண்டுக்க கூட மாட்றாங்க? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+