விராட் கோலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு.. பயிற்சியில் டிராவிட் எச்சரிக்கை.. இடத்துக்கு ஆபத்து
பிர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கம் இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சையும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே அடித்த விராட் கோலி மீது கிரிக்கெட் விமர்சகர்கள் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
டி20 அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதால் விராட் கோலியின் இடம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், பிர்மிங்காமில் நடைபெற்ற பயிற்சி முகாமில் விராட் கோலிக்கு தனியாக ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தார் டிராவிட். விராட் கோலியின் பேட்டிங்கை கவனித்த டிராவிட், சில அறிவுரைகளை கூறினார். அப்போது விராட் கோலி பார்ம்க்கு திரும்புவது அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை டிராவிட் கூறியுள்ளார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்துள்ளனர். மேலும் அணிக்கு ராகுல் திரும்பினால், பிளேயிங் லெவனில் இடமே இருக்காது. இதனால், ரன் குவிக்கும் விரர்களுக்கு மட்டும் தாடன அணியில் இடம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் டிராவிட் பேசி இருக்கிறார்.
எதை பற்றியும் கவலை இல்லாமல் எடுத்த உடனே ரன் குவிப்பில் இறங்குமாறு விராட் கோலிக்கு அட்வைஸ் அளித்துள்ள டிராவிட், தங்களை அவ்வளவு சீக்கிரம் அணியை விட்டு நீக்க மாட்டோம், ஆனால், இன்னும் எஞ்சியுள்ள போட்டியில் பார்ம்க்கு திரும்பிவிடுங்கள் என்று விராட் கோலிக்கு டிராவிட் அறிவுரை வழங்கி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications