Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? ஜடேஜா நீக்கப்பட வாய்ப்பு

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தூர், ஹோல்கர் மைதானத்தில் நடக்கும் இந்தத் தொடர் தீர்மானிக்கும் போட்டிக்கான இந்திய லெவன் அணியில் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்திய அணிக்காக ரவீந்திர ஜடேஜா தனது கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, இந்தத் தொடரில் ஆடிய இரண்டு போட்டிகளிலும் விக்கெட் எடுக்காததுடன், ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கிலும் சோபிக்காததால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இதன் காரணமாக, மூத்த ஆல்-ரவுண்டரான ஜடேஜாவுக்குப் பதிலாக வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜடேஜாவுக்கு பதிலாக, டெல்லியைச் சேர்ந்த ஆயுஷ் படோனியை அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. ஜனவரி 12 அன்று காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட படோனி, ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஆவார். தேவைப்பட்டால் சுழற்பந்து வீச்சிலும் அவரால் பங்களிக்க முடியும். இந்த தொடர் தீர்மானிக்கும் போட்டியில், இந்தியாவுக்கு ஆறாவது பந்துவீச்சு ஆப்சனாக படோனி இருப்பார்.

ஆயுஷ் படோனி மட்டுமின்றி, இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கும் இந்தூரில் களமிறங்க வாய்ப்புள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த அர்ஷ்தீப், டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிக விக்கெட் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பிரசித் விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தத் தவறி, பெரும்பாலான நேரம் தாக்கத்தை ஏற்படுத்தாத பவுலராக உள்ளார்.

ரோஹித் சர்மா, கேப்டன் ஷுப்மன் கில், உலக நம்பர் 1 ஒருநாள் வீரர் விராட் கோலி, துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் ஆகியோர் அடங்கிய பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. 22 வயதான ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார், மற்றொரு வாய்ப்புக்கு அவர் முற்றிலும் தகுதியானவர்.

குல்தீப் யாதவ் தனது 10 ஓவர்களில் 82 ரன்கள் விட்டுக் கொடுத்தபோதும், அணியில் அவரது இடத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தத் தொடர் தீர்மானிக்கும் போட்டியில், குல்தீப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவுக்குத் தொடர்ச்சியாக இரண்டாவது ஒருநாள் தொடரை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் உத்தேச லெவன் அணி: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஆயுஷ் படோனி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

Story first published: Friday, January 16, 2026, 11:36 [IST]
Other articles published on Jan 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+