Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 93 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. 5 இடது கை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கி இந்தியா வரலாறு

மான்செஸ்டர்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 93 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரே போட்டியில் 5 இடது கை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று (ஜூலை 23) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டபோது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

India Creates History Five Left-Handers in Test XI for First Time in 93 Years

வரலாற்றில் இதுவே முதல் முறை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் 592 டெஸ்ட் போட்டிகளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் ஒருசேர இடம் பிடித்துள்ளனர். இதற்கு முன் பலமுறை நான்கு இடது கை பேட்ஸ்மேன்களுடன் இந்தியா விளையாடியிருந்தாலும், ஐந்து பேருடன் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும்.

அணியில் 3 முக்கிய மாற்றங்கள்

இந்த முக்கியமான போட்டிக்காக இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத தமிழக வீரர் சாய் சுதர்சன், மீண்டும் அணிக்குத் திரும்பி கருண் நாயருக்குப் பதிலாக 3-ம் இடத்தில் களமிறங்குகிறார்.

அதேபோல், காயமடைந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த ஷர்துல் தாக்கூர் அணிக்குள் வந்துள்ளார். இவர்களைத் தவிர, ஹரியானாவைச் சேர்ந்த 24 வயது வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ், ஆகாஷ் தீப்க்குப் பதிலாக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ரிஷப் பண்ட் காயமா?

லார்ட்ஸ் டெஸ்டின்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அவர் சரியான நேரத்தில் குணமடைந்து அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் பண்ட், ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் இரண்டு சதங்கள் (134 மற்றும் 118) அடித்து அசத்தியுள்ளார். இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 425 ரன்கள் குவித்து, இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இரு அணிகளின் விவரம்:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Story first published: Wednesday, July 23, 2025, 18:01 [IST]
Other articles published on Jul 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+