IND vs ZIM: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி.. 3 டி20 போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு
மும்பை: வரும் ஜூலை 2026-ல் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் என அறிவித்துள்ளது. ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் இப்போட்டிகள் நடக்கும். மேலும், ஜனவரி 2027-ல் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு வந்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர்களில் மோதும்.
இந்திய அணி 2024-ல் ஜிம்பாப்வேயுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கடைசியாக மோதியது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை 2026 தொடரில் மூன்று டி20 போட்டிகள் இடம்பெறும். இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 23 அன்றும், மற்ற போட்டிகள் ஜூலை 25 மற்றும் 26 அன்றும் நடைபெறும்.

ஜனவரி 2027-ல் ஜிம்பாப்வேயின் இந்திய சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் இடம்பெறும். இப்போட்டிகள் ஜனவரி 3, 6, 9 ஆகிய தேதிகளில் முறையே கொல்கத்தா, ஹைதராபாத், மும்பையில் நடைபெறும்.நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடிய நிலையில், தற்போது இந்தியா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026-27 உள்நாட்டு சீசனில் இந்திய அணிக்கு தொடர்ச்சியான பரபரப்பான ஆட்டங்கள் காத்திருக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று ஒருநாள் (செப்டம்பர் 27 - திருவனந்தபுரம், செப்டம்பர் 30 - கவுகாத்தி, அக்டோபர் 3 - புதிய சண்டிகர்), ஐந்து டி20 போட்டிகளில் (அக்டோபர் 6 - லக்னோ, அக்டோபர் 9 - ராஞ்சி, அக்டோபர் 11 - இந்தூர், அக்டோபர் 14 - ஹைதராபாத், அக்டோபர் 17 - பெங்களூரு) இந்தியாவுடன் மோதும்.
டிசம்பர் 2026-ல் இலங்கை அணியும் இந்தியாவுடன் மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் மோதவுள்ளது. ஒருநாள் தொடர் டிசம்பர் 13 (டெல்லி), டிசம்பர் 16 (பெங்களூரு), டிசம்பர் 19 (அகமதாபாத்) ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் டிசம்பர் 22 (ராஜ்கோட்), டிசம்பர் 24 (கட்டாக்), டிசம்பர் 27 (புனே) ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
ஜனவரி-மார்ச் 2027-ல், போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா தொடரும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடரில், ஜனவரி 21-25 (நாக்பூர்), ஜனவரி 29-பிப்ரவரி 2 (சென்னை), பிப்ரவரி 11-15 (கவுகாத்தி), பிப்ரவரி 19-23 (ராஞ்சி), பிப்ரவரி 27-மார்ச் 3 (அகமதாபாத்) ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கும்.


Click it and Unblock the Notifications