டெஸ்ட் தொடருக்காக இலங்கை சென்ற ஸ்ரீசாந்த்துக்கு காயம்-நாடு திரும்புகிறார்

3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றுள்ளது. இதில் ஜாகிர்கான் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆனால் தற்போது ஸ்ரீசாந்த்துக்கே காயம் ஏற்பட்டு விட்டதாம். முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காயம் குறித்து கிரிக்கெட் வாரியம் கமுக்கமாக உள்ளது. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவிலல்லை.
ஸ்ரீசாந்த் நாடு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்தால், அவருக்குப் பதில் இஷாந்த் சர்மா மற்றும் அபிமன்யூ மிதுன் ஆகியோரை வைத்து இலங்கையை சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications