Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2025ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முழு அட்டவணை விவரம்.. எந்த அணிகளுடன் மோதுகிறது?

மும்பை : 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை தற்போது வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தாலும், இறுதி கட்டங்களில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் இந்திய அணிக்கு பல புதிய தொடக்கத்தையும் மாற்றத்தையும் தர வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு இந்திய அணி 18 டி20 போட்டிகள், 10 டெஸ்ட் போட்டிகள், 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

india cricket team

இதைத் தவிர சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்தியா மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்தியா விளையாடும் அட்டவணை விவரத்தை தற்போது பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் ஜனவரி 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிட்னியில் விளையாடுகிறது.

இந்த தொடர் முடிவடைந்த பிறகு ஜனவரி 22ஆம் தேதி இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்டு தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுகிறது இது பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா தகுதி பெற்றால் விளையாடும்.

அதன் பிறகு ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அது முடிந்தவுடன் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதனை அடுத்து அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் அக்டோபர், நவம்பர் மாதம் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த தொடர் முடிந்த உடன் நவம்பர் மாதம் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Story first published: Tuesday, December 31, 2024, 8:37 [IST]
Other articles published on Dec 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+