Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2026 இந்திய கிரிக்கெட் அணி முழு அட்டவணை.. பங்கேற்கும் தொடர்கள் விவரம்

மும்பை: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டுக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இந்திய அணி ஐந்து டெஸ்ட், 18 ஒருநாள், மற்றும் 25க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. 2025 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாதது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு, ஷுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக உருவெடுத்தது, இளம் வீரர்களின் எழுச்சி என பல முக்கிய நிகழ்வுகள் நிறைந்திருந்தன.

2026, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்து களம் காண்கிறது. இந்தியா வெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இந்த புத்தாண்டில் ஆடும். ஆனால் டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் உட்பட பல டி20 தொடர்கள் உள்ளன. கோலி, ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடுவதால், அந்த வடிவத்திற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும்.

India 2026 schedule

ஜனவரி (நியூசிலாந்து தொடர்): மூன்று ஒருநாள் போட்டிகள்: ஜனவரி 11 (வதோதரா), 14 (ராஜ்கோட்), 18 (இந்தூர்). ஐந்து டி20 போட்டிகள்: ஜனவரி 21 (நாக்பூர்), 23 (ராய்ப்பூர்), 25 (குவஹாத்தி), 28 (விசாகப்பட்டினம்), 31 (திருவனந்தபுரம்).

பிப்ரவரி (ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை - லீக் சுற்று : பிப்ரவரி 7 அமெரிக்கா (மும்பை), பிப்ரவரி 12 நமீபியா (டெல்லி), பிப்ரவரி 15 பாகிஸ்தான் (கொழும்பு), பிப்ரவரி 18 நெதர்லாந்து (அகமதாபாத்).

ஜூலை (இங்கிலாந்து சுற்றுப்பயணம்):ஐந்து டி20 போட்டிகள்: ஜூலை 1 (செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்), 4 (மான்செஸ்டர்), 7 (நாட்டிங்காம்), 9 (பிரிஸ்டல்), 11 (சவுத்தாம்ப்டன்). மூன்று ஒருநாள் போட்டிகள்: ஜூலை 14 (பர்மிங்காம்), 16 (கார்டிஃப்), 19 (லண்டன்).

மார்ச் - செப்டம்பர் (அட்டவணை வெளியாகாத தொடர்கள்): மார்ச்-மே வரை ஐபிஎல் 2026 நடைபெறும். ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுடன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா மோதும். ஆகஸ்டில் இலங்கையில் இரண்டு டெஸ்ட், செப்டம்பரில் ஆப்கானிஸ்தானில் மூன்று டி20 போட்டிகளும் அடங்கும்.

செப்டம்பர் - டிசம்பர் (அட்டவணை வெளியாகாத தொடர்கள்): செப்டம்பர்-அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அக்டோபர்-நவம்பரில் நியூசிலாந்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், ஐந்து டி20. டிசம்பரில் இலங்கையுடன் சொந்த மண்ணில் மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் நடைபெறும். இவற்றின் அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

Story first published: Thursday, January 1, 2026, 12:34 [IST]
Other articles published on Jan 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+