முத்தரப்புத் தொடரில் தோற்று நாடு திரும்பிய இந்திய வீரர்கள்

நேற்று தம்புல்லாவில் நடந்த இறுதிப் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதன் மூலம் முத்தரப்புத் தொடரில் கோப்பையை வெல்ல முடியாத நிலைக்கு அது தள்ளப்பட்டது.
பெரும் சர்ச்சைகளுடன் நடந்து முடிந்த இந்தத் தொடரை முடித்துக் கொண்ட பின்னர் நேற்றே இந்திய அணியினர் டோணி தலைமையில் சென்னை திரும்பினர்.
பின்னர் அனைத்து வீரர்களும் அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிச் சென்றனர். டோணி மட்டும் போகவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக உள்ள டோணி இன்று மாலை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்கள் வீழ்த்தி உலக சாதனை படைத்ததற்காக முரளிதரனுக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக டோணி பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியின்போது அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரியாவிடை தரும் நிகழ்ச்சியும் சேர்த்து நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications