2027 உலககோப்பைக்கான இந்திய அணி.. 5 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. EX ஆர்சிபி வீரர் வெளியிட்ட பட்டியல்
மும்பை: 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை முன்னாள் ஆர்சிபி வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். முகுந்த் தனது அணியின் டாப் 3 பேட்டர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், மாற்றுத் தொடக்க ஆட்டக்காரராகக் கருதப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அவர் இந்த அணியில் சேர்க்கவில்லை.
விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும், இவர்களுடன் நடுவரிசை பேட்டராக ஸ்ரேயாஸ் ஐயரையும் சேர்த்துள்ளார். முகுந்த் தேர்வு செய்துள்ள மூன்று ஆல்-ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு இதில் இடமில்லை.

முகுந்தின் அணியில் ஒரே ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக குல்தீப் யாதவ் மட்டுமே இடம் பிடித்துள்ளார். வருண் சக்கரவர்த்திக்கு இதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 15 பேர் கொண்ட அணியின் கடைசி ஐந்து இடங்களில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா மற்றும் குர்னூர் பிரார் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். பிரின்ஸ் யாதவ்,முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முகுந்தின் உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை.
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரானது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.அபினவ் முகுந்தின் உலககோப்பை அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குர்னூர் பிரார்.
இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் ஓராண்டிற்கும் மேல் உள்ள நிலையில், 2027 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ள மேலும் ஐந்து வீரர்களை அபிநவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரையும் இந்த 'வாய்ப்பு உள்ளவர்களின்' பட்டியலில் அவர் சேர்த்துள்ளார்.
இவர்களுடன் பேட்டிங் ஆல்-ரவுண்டர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சிவம் துபே ஆகியோரையும் முகுந்த் இந்த பட்டியலில் வைத்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்த பட்டியலில் ஐந்தாவது வீரராக இடம் பெற்றுள்ளார்.இதேவேளை, இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தான் கருதும் சில வீரர்களின் பெயர்களையும் முன்னாள் பேட்டர் முகுந்த் குறிப்பிட்டுள்ளார். இதில் டி20 நட்சத்திரங்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் திலக் வர்மா உள்ளிட்டோர் அடங்குவர்.


Click it and Unblock the Notifications

