Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2027 உலக கோப்பைக்கான இந்திய அணி.. 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்த ராபின் உத்தப்பா

மும்பை: 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில், இந்திய அணியின் சிறந்த வீரர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனைகள் தற்போதே வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய அணியின் முன்னாள் பேட்டர் ராபின் உத்தப்பா, 2027 உலகக் கோப்பைக்கான தனது 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியை அவர் ஒரு Bomb Squad என்று வர்ணித்துள்ளார், இது இந்தியாவிற்கு ஒரு சிறந்த உலகக் கோப்பை தொடரை உறுதி செய்யும் என்றும் அவர் நம்பின்கை தெரிவித்துள்ளார்.இந்தியா கடைசியாக 2011 இல் உலகக் கோப்பையை வென்றது, அப்போது சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. 2023 ஆம் ஆண்டிலும் இந்த சாதனையை மீண்டும் செய்ய நெருங்கியது.

India cricket team

ஆனால் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதால் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளதை சுட்டிக்காட்டிய உத்தப்பா, அடுத்த 12 மாதங்களுக்கு இதே வீரர்கள் அடங்கிய குழு விளையாடுவது இந்த முக்கிய தொடருக்கான சிறந்த தயாரிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

"இது தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள 2027 உலகக் கோப்பைக்கான எனது இந்திய அணி. இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும், அடுத்த ஓராண்டில் இந்த 15 வீரர்கள் ஒன்றாக இணைந்து விளையாடினால், அது சரியான தயாரிப்பாக இருக்கும். இந்த அணி ஒரு பாம் ஸ்குவாட் போல வலுவாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்," என்று உத்தப்பா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

உத்தப்பாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேர்வில் மூத்த வீரர் ரோஹித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் மற்றும் இன்னும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாத இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார்.

"சஞ்சு ஒரு பேக்கப் விக்கெட் கீப்பராகவும், பினிஷர் ரோலிலும், தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடக்கூடிய திறமை கொண்டவர். அதனால்தான் நான் சஞ்சுவை தேர்வு செய்கிறேன். எதிரணிக்கு எதிராக பந்தை வெளியே திருப்புவது, உள்ளே திருப்புவது என அனைத்து விதமான சுழற்பந்து வீச்சுகளும் இதில் அடங்கியுள்ளன," என்று உத்தப்பா கூறினார்.

உத்தப்பாவின் நான்கு பேர் கொண்ட வேகப்பந்து வீச்சு கூட்டணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.2027 உலகக் கோப்பைக்கான ராபின் உத்தப்பாவின் 15 பேர் கொண்ட இந்திய அணி:ரோஹித் சர்மா, சுப்மன் கில், வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

Story first published: Thursday, August 20, 2026, 18:30 [IST]
Other articles published on Aug 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+