மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பல பிரச்சனைகள் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கான டி20 இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது பல சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.
இதன் மூலம் தொடக்க வீரராக களம் இறங்கி வந்த சஞ்சு சாம்சன் நடுவரிசையில் இறங்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் பந்துவீச்சில் பும்ரா மட்டும்தான் ஸ்பெஷல் வேகப்பந்துவீச்சாளராக களம் இறங்கினார். மற்றவர்கள் அனைவரும் பார்ட் டைம் பவுலராக இருந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், "இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா, டி20 கிரிக்கெட்டின் பலகாலம் இருந்தார். தற்போது சிவம் துபே நமது மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற நம்பிக்கையை பெற கடுமையாக உழைக்க வேண்டும்."
"அவருடைய செயல்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. யுஏஇ அணிக்கு எதிராக அவர் நன்றாகத்தான் பந்து வீசினார் என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். ஆனால் அந்த அணிக்கு எதிராக யார் வேண்டுமானாலும் சிறப்பாக பந்து வீசலாம் என்பதை மறந்து விடக்கூடாது. இதுவே பெரிய அணிகளுக்கு எதிராக நாம் விளையாடும் போது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்."
"ரிங்கு சிங் பதிலாக சிவம் துபேவை தேர்வு செய்திருப்பதற்கு அவர் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இருப்பார் என்ற ஒரே காரணமாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் துபே மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்றுவாரா என்பதை வரும் போட்டிகளில் தான் நாம் பார்க்க வேண்டும்."
"இது போன்று கில் தொடக்க வீரராக களமிறங்குவதன் மூலம் சஞ்சு சாம்சன் நடுவரிசையில் களம் இறங்குகிறார்.இதனால் சஞ்சு சாம்சன் மெதுவாக ஓரம் கட்டப்படுகிறாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது. இனி அவர் நான்காவது அல்லது ஐந்தாவது வீரராக களம் இறங்குவார். டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக பவர் பிளேவில் விளையாடி ரன்கனை சேர்ப்பதும் நடு வரிசையில் பவர் பிளே இல்லாமல் அதிரடியாக விளையாடுவதிலும் பல வித்தியாசம் இருக்கின்றது. எனவே சஞ்சு சாம்சனுக்கு நிச்சயம் நடு வரிசையில் பல சவால்கள் காத்திருக்கிறது" என்று சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்.