கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து! தேதியை குறித்த பிசிசிஐ.. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தான் கடைசி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகிக்கும் கம்பீருக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணி எங்கெல்லாம் தோற்கவில்லையோ, அங்கெல்லாம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு தோல்வியை தழுவி இருக்கிறது.
டி20 உலக கோப்பையில் உச்சம் தொட்ட இந்திய அணி தற்போது சரிவை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இழந்தது, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்தியா இழந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது என மோசமான செயல்பாடுகளை இந்திய அணி கம்பீரின் வருகைக்கு பிறகு சந்தித்து வருகிறது. இந்த சூழலில் கம்பீரின் செயல்பாடு குறித்து பிசிசிஐ தற்போது ஆலோசனை நடத்தி இருக்கிறது. இதில் கம்பீரின் வருகைக்கு பிறகு இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் தங்களுடைய கவலையை தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் கம்பீர் விரைவில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பிசிசிஐ நிர்வாகிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொருத்தே கம்பீரின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது.
இல்லையென்றால் டெஸ்ட் போட்டிக்கு ஒரு பயிற்சியாளர்,ஒரு நாள், டி20 போட்டிக்கு ஒரு பயிற்சியாளர் என்ற முறையை பயன்படுத்தலாம் என்றும் பி சி சி ஐ யோசித்து வருகிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நெருக்கடியில் பயிற்சியாளர் கம்பீர் இருக்கிறார்.
இந்திய அணி பேட்டிங்கிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய துபாய் மைதானத்தில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதும் பின்னடைவை தரும். துபாய் ஆடுகளத்தில் டாஸ் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்வதை கடினமாக கூட மாறலாம். வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை லீக் சுற்றில் இந்தியா எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, January 16, 2025, 12:09 [IST]
Other articles published on Jan 16, 2025


Click it and Unblock the Notifications