Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ஒன்றும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்ல.. இந்திய அணியில் அரசியல் செய்ய மாட்டேன்- கம்பீர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவி ஏற்ற நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து படு தோல்வியை தழுவி வந்தது. எனினும் டி20 கிரிக்கெட்டில் கம்பீர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சரியாக விளையாடாத நிலையில் கம்பீரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி அனைத்து விமர்சனங்களுக்கும் கம்பீர் பதிலடி கொடுத்திருந்தார்.

Gautam Gambhir

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் எந்த வித கிரிக்கெட் தொடர்பான பணியிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருக்கிறார். இந்த சூழலில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கம்பீரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில், நான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் போது என்னுடைய பயணத்தில் ஏற்றுத்தாழ்வு கண்டிப்பாக இருக்கும் என்று தெரியும். ஆனால் என்னுடைய பணி நாட்டிற்கு பெருமை சேர்ப்பது தான், தவிர ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் வர்ணனை செய்யும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்கு கிடையாது. சிலர் 25 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் என்பது தங்களுடைய குடும்ப சொத்து என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் என் நாட்டு மக்களுடைய சொத்து. நான் ஏதோ சாதாரண ஒரு கிளப் அல்லது ஒரு உள்ளூர் அணியின் பயிற்சியாளர் கிடையாது. எனக்கு அணியில் அரசியல் செய்வதில் நம்பிக்கை இல்லை.

நான் இங்கு அணியை உருவாக்க வந்திருக்கின்றேன். அந்த அணி பயமின்றியும் பெருமையுடனும் விளையாடும் வகையில் கட்டமைக்க வேண்டும். சிலர் எனக்கு பரிசுத் தொகை கிடைத்தது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களெல்லாம் இந்தியாவில் சம்பாதித்து இங்கு வரி கட்ட வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் சென்று குடியேறி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது கிரிக்கெட் ஒன்றும் உங்க அப்பன் வீட்டு சொத்து கிடையாது.நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு சென்று விடுவீர்கள். நான் இந்தியாவில் இருந்து என்னுடைய வரிப்பணத்தை செலுத்துவேன் என்று கம்பீர் கூறி இருக்கின்றார்.

Story first published: Tuesday, May 6, 2025, 23:25 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+