Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு.. கம்பீர் முடிவில் பெரிய மாற்றம்.. ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் அண்மையில் நியமிக்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. இதற்கு காரணம் கம்பீர் இந்திய அணியில் பல மாற்றங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு தகுந்தார் போல் கம்பீர் பயிற்சியாளர் பதவி ஏற்பதற்கு முன்பு பிசிசிஐ இடம் சில கண்டிஷனை போட்டிருந்தார். அதில் முக்கியமானது டெஸ்ட்டுக்கு ஒரு அணியும், ஒரு நாள் போட்டிக்கான ஒரு அணியும் தயார் செய்ய வேண்டும் என்பதுதான்.

india cricket team Gautam Gambhir

இதனால் பல இளம் வீரர்களுக்கு இந்திய அணிகள் உரையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு கம்பீர் ஒரு பெரிய யூ டர்னை போட்டு விட்டார். அதாவது டெஸ்ட் அணிக்கு ஒரு வீரர்களும், ஒரு நாள் அணிக்கு ஒரு வீரர்களும் என்று தேர்வு செய்ய வேண்டும் என கூறிய கம்பீர், தற்போது திடீரென்று இனி அனைத்து வீரர்களும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் நாட்டுக்காக முதலில் விளையாட வேண்டும். நாடு உங்களை எதற்கு அழைக்கிறதோ அதனை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இனி நான் ஒரு நாள் போட்டி மட்டும்தான் விளையாடுவேன். டெஸ்ட் போட்டி மட்டும்தான் விளையாடுவேன் என்று கூறக்கூடாது. மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிடும் விளையாடுவதற்கு தயாராக இருங்கள்.

காயம் அடைந்து விடும் என்று நீங்கள் பயப்படவும் கூடாது. மூன்று வகையிலான கிரிக்கெட்டையும் விளையாடுங்கள். அதன் பிறகு காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன வழியோ அதை பாருங்கள். அதை விட்டுவிட்டு இனி இந்தப் போட்டிகளுக்கு மட்டும் தான் நான் விளையாடுவேன் என்று கூறக்கூடாது என்று கம்பீர் கூறியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி விளையாட மாட்டேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியிருந்த நிலையில் அவர் அணிக்கு கண்டிப்பாக வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவை தான் கம்பீர் மறைமுகமாக சாடி இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. சுப்மன் கில் போன்ற வீரர்கள் தொடர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகின்றனர். இதனால் பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Story first published: Sunday, July 14, 2024, 13:38 [IST]
Other articles published on Jul 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+