Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணி தலைவர்களை தேடுகிறது.. முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து

மும்பை: இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு கேப்டன்ஸி பொறுப்பில் ஜொலிக்க போதுமான நேரம் தேவை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். கில், முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியவர். 2025 ஆசிய கோப்பைக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்திய அணியின் முழுநேர கேப்டன்களாக பொறுப்பேற்ற காலகட்டங்களைப் பற்றி பேசிய இர்பான் பதான், சுப்மன் கில்லுக்கு நேரம் தேவை என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணி தற்போது ஒரு தலைவரை தேடி வருகிறது.

Irfan Pathan

தோனி கேப்டனாக வந்தபோது ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, உலகக் கோப்பையை உடனடியாக வென்றதால் அந்த மாற்றம் மிகவும் சீராக இருந்தது. பின்னர், விராட் கோலி பொறுப்பேற்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டார். அதன்பின், ரோஹித் ஷர்மா வந்து அற்புதமாக செயல்பட்டார்.

இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவரை நாம் எப்போதும் தேடுகிறோம்," என்று இர்பான், பதான் தெரிவித்தார்.2025 ஆசிய கோப்பைக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையில் எட்டு அணிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ஏ குழுவில் இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 14 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடனான மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியில் இந்தியா மோதவுள்ளது.பஞ்சாபைச் சேர்ந்த கில்லின் சமீபத்திய கேப்டன்ஸி வெற்றிகரமாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது செயல்பாடு பிசிசிஐ வட்டாரத்தில் பாராட்டப்பட்டது.

இந்தியாவின் கேப்டனாக அவரது முதல் பணியில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தார். மேலும், 10 இன்னிங்ஸ்களில் 754 ரன்கள் குவித்து தொடரின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்தியா அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை நடத்தவுள்ளது. அதன் பிறகு, கில் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக மாற வாய்ப்புள்ளது. தற்போது வரை டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஸி எதிர்காலத்திற்கு இன்னும் எந்த ஆபத்தும் இல்லை

Story first published: Wednesday, September 3, 2025, 7:30 [IST]
Other articles published on Sep 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+