Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் முடிவவில் தலையிடுகிறார்! கம்பீர் மீது கடும் கோபத்தில் ரோகித் சர்மா.. தோல்விக்கு காரணமே அது தான்

கொழும்பு : 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் என ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு கத்துக்குட்டி அணி போல் விளையாடிக் கொண்டிருக்கும் இலங்கையிடம் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது.

இது ரோகித் சர்மாவை கடுப்படையச் செய்திருக்கிறது. கேப்டனாக ரோகித் சர்மா எப்போதும் சுதந்திரமாக செயல்படுவார். எந்த முடிவை எடுக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஒரு கேப்டன் கையில் தான் இருக்கிறது. ஆனால் இலங்கைத் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டனாக செயல்பட விடாமல் கம்பீர் தலையிட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ind vs sl india sri lanka

கம்பீர் தேவை இல்லாமல் சோதனை செய்கிறேன் என்ற பெயரில் பேட்டிங் வரிசையை ரோகித் சர்மாவின் பேச்சை மீறி மாற்றி இருக்கிறார். மேலும் அக்சர் பட்டேல் போன்ற வீரர்களையெல்லாம் நடு வரிசையில் களமிறக்கி இருக்கிறார். இதனால் கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களின் உத்வேகம் ஆட்டம் கண்டு இருக்கிறது.

இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதே போன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் முஹமது சிராஜ் என்ற ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் வைத்து களமிறங்கியதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமாக பார்க்கப்படுகிறது. இது அனைத்துமே கம்பீர் எடுத்த முடிவு என தெரிகிறது. கம்பீர் தன்னுடைய சீனியர் வீரர் என்பதால் தற்போது அவர் பயிற்சியாளராக இருக்கும்போது, இதற்கு எதிர்த்து பேச முடியாத நிலையில் ரோகித் சர்மா இருக்கிறார்.

மேலும் இந்திய அணி என்னுடைய கண்ட்ரோல்தான் என்று நிரூபிக்க கம்பீர் இவ்வாறு செய்திருக்கிறார். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா கம்பீர் மீது புகார் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் தொடரிலே கம்பீர் பயிற்சியாளராக மோசமாக செயல்பட்டு இருக்கிறார் என்று ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் நல்லா இருக்கும் இந்திய அணியை கெடுக்கவே கம்பீர் உள்ளே வந்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

Story first published: Thursday, August 8, 2024, 13:48 [IST]
Other articles published on Aug 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+