Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த 2 ஆண்டுகள் இந்தியா விளையாட போகும் கிரிக்கெட் போட்டிகள்.. அட்டவணை விவரம் இதோ

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இனி ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் பங்குபெறப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்தெந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது என்பது குறித்து முழு அட்டவணையை தற்போது பார்க்கலாம்.

தற்போது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

India cricket team schedule for 2024 and 2025 calender

இந்தத் தொடர் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டிசம்பர்,ஜனவரி மாதம் மூன்று டி20 மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு ஜனவரி இறுதியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது.

அதன் பிறகு பிப்ரவரி முழுவதும் இங்கிலாந்து எதிராக தங்களது சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. மார்ச் முதல் மே மாதம் வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. அந்த தொடர் முடிவடைந்த உடன் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்டு தொடரில் விளையாடுகிறது.

அதன் பிறகு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வங்கதேச அணியை இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டுக் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் நவம்பர் மாதம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்துடன் இந்தியா சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதனை அடுத்து நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடர் ஜனவரி மாதம் வரை நடைபெறும். இதில் எடுத்து மீண்டும் இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்தை மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை அடுத்து மார்ச் முதல் மே மாதம் வரை ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடர் நடைபெறும். அதன் பிறகு ஜூன் மாதம் 2020ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஆகஸ்ட் மாதம் வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Story first published: Sunday, December 3, 2023, 9:39 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+