Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நவம்பர் மாதத்தில் இவ்வளவு பெரிய மேட்ச் இருக்கா? கோலி, ரோகித் கம்பேக்.. இந்திய கிரிக்கெட் அணி அட்டவணை

மும்பை: அக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.

இதில் ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்து தொடர் நாயகன் விருதை பெற்றது மட்டுமல்லாமல் ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இந்த நிலையில் நவம்பர் மாதம் இந்திய அணிக்கு என்னவென்ன கிரிக்கெட் போட்டிகள் இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

India cricket team

நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து நவம்பர் 6ஆம் தேதி நான்காவது டி20 போட்டியிலும், நவம்பர் 8ஆம் தேதி ஐந்தாவது டி20 போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த தொடர் முடிவடைந்து இந்தியாவுக்கு ஒரு வாரம் தான் ஓய்வு இருக்கிறது. அதன்பின் நவம்பர் 14ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் கொல்கத்தாவிலும், இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியிலும் நடைபெற இருக்கிறது.

இந்த தொடர் முடிவடைந்த உடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி ராஞ்சியில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கம் பேக் கொடுக்க உள்ளனர். இதனால் நவம்பர் மாதமும் இந்தியாவுக்கு தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர நவம்பர் 14ஆம் தேதி இந்திய ஜூனியர் அணி ஆசிய கோப்பை விளையாடுகிறது.

Story first published: Saturday, November 1, 2025, 18:48 [IST]
Other articles published on Nov 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+