For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிவம் துபேக்கு அடிச்ச லக்.. முக்கிய வீரருக்கு காயம்.. தொடர்ந்து சொதப்பும் நிலையில்,பிசிசிஐ நம்பிக்கை

மும்பை : டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் அதிரடி ஆல் ரவுண்டர் சிவம் துபேக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. 31 வயதான சிவம் துபே, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார் என்று அவரை ரசிகர்கள் புகழ்ந்தனர்.

ஆனால் என்று டி20 உலக கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைத்ததோ அதிலிருந்து அவர் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.

ind vs zim Shivam dube nitish reddy

இந்த நிலையில் சிவம் துபே மீது நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா அவருக்கு டி20 உலக கோப்பை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கொடுத்தார். ஆனால் ரோகித் சர்மா வைத்த நம்பிக்கையை சிவம் துபே கெடுத்து வருகிறார். அமெரிக்கா அணிக்கு எதிராக 31 ரன்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 10 ரன்கள், பங்களாதேஷ்க்கு எதிராக 34 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 28 ரன்கள் என சிவம் துபே அடித்தாலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் குவித்திருக்க வேண்டியது. ஆனால் சிவம் துபே மோசமாக விளையாடியதால் இந்திய அணி ஸ்கோர் குறைந்தது. இதனால் துபேவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் போர் கொடி தூக்கிய நிலையில் தற்போது பிசிசிஐ அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

அதாவது டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் இளம் வீரர்களை கொண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட அணியில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அறிவிக்கப்பட்ட நிதிஷ் ரெட்டி என்ற ஹைதராபாத் அணி வீரருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு பதில் திலக் வர்மா சஷாந்த் சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் யாருமே எதிர்பாராமல் சிவம் துபேவை பிசிசிஐ சேர்த்து இருக்கிறது. சிவம் துபே மோசமாக விளையாடி வருகிறார். அவரை அணிந்து நீக்குங்கள் என்று கூறி வந்த நிலையில் பிசிசிஐ அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 26, 2024, 20:37 [IST]
Other articles published on Jun 26, 2024
English summary
India cricket team - Shivam dube replaces Nitish reddy in Zimbabwe series சிவம் துபேக்கு அடிச்ச லக்.. முக்கிய வீரருக்கு காயம்.. தொடர்ந்து சொதப்பும் நிலையில்,பிசிசிஐ நம்பிக்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+