Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்டோபர் மாதம் இத்தனை கிரிக்கெட் போட்டிகளா! இந்திய அணி ரசிகர்கள் குஷி..பல முக்கிய தொடர்களும் இருக்கு

மும்பை : வங்கதேச தொடருக்கு முன்பாக இந்திய அணி கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் எந்த ஒரு அணியும் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தது.

இந்த சூழலில் இந்த அக்டோபர் மாதம் இந்திய அணி உட்பட பல பெரிய அணிகளும் இரவு பகலாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

india national cricket team india vs bangladesh t20

அக்டோபர் மாதத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறித்து தற்போது பார்க்கலாம். அக்டோபர் ஆறாம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இது அக்டோபர் 6 அக்டோபர் 9 அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதேபோன்று பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

அக்டோபர் 7ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகளும், அக்டோபர் 15 இரண்டாவது டெஸ்ட் போட்டியும், அக்டோபர் 24ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இதே போன்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அக்டோபர் 13ஆம் தேதி முதல் டி20 போட்டியும், அக்டோபர் 15ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும், அக்டோபர் 17ஆம் தேதி மூன்றாவது. டி20 போட்டியும் நடைபெறுகிறது இதனை தொடர்ந்து ஒரு நாள் தொடர் 20ஆம் தேதி நடைபெறுகிறது 23ஆம் தேதி இரண்டாவது போட்டியும், 26 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.
இதே காலகட்டத்தில் நியூசிலாந்த அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் முதல் டெஸ்ட் போட்டியிலும், அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இதேபோன்று தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

அக்டோபர் 21ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், அக்டோபர் 29ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி அக்டோபர் மாதம் முழுவதும் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 2, 2024, 16:44 [IST]
Other articles published on Oct 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+