பாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் உலககோப்பை.. உற்சாகம் அடைந்த பாஜக தலைவர்கள்!
பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் உலக கோப்பையை 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வென்றிருக்கிறது.
ஐசிசி கோப்பையை 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வென்று சாதனை படைத்திருக்கிறது. தோனிக்கு பிறகு இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி தொடரை வெல்லவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் அதற்கு ரோகித் சர்மா விடை கொடுத்திருக்கிறார்.இந்த நிலையில் கிரிக்கெட் வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல் அரசியலிலும் முக்கிய பங்கு ஆற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது.

கடந்த 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இறுதியாக வீழ்ந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் பலர் பாஜக ஆட்சி காலத்தில் இந்தியா ஒருமுறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை என்றும் இதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் போட்டு கிண்டல் செய்து வந்தனர்.
பாஜக ஆட்சி காலத்தில் தான் இந்தியா வரிசையாக 2003, 2015, 2019 எந்த ஒரு 50 உலகக் கோப்பையும், 2014, 2016, 2021, 2022 ஆகிய எந்த ஒரு டி20 உலக கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை. இதனை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் பாஜகவை கிண்டல் செய்து வந்தனர். தற்போது இதற்கு விடையாக இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு டி20 உலககோப்பையை இன்று வென்று இருப்பது பாஜக கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இனி தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை என்று யாரும் சொல்ல முடியாது என அக்கட்சியினர் சமூகவலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் பி சி சி ஐ செயலாளராக ஜெய்ஷாவின் பணி எப்போதும் கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது அவருடைய பதவி காலத்திலும் இந்தியா வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications