வர்லாம் வர்லாம் வா.. அறிமுக டெஸ்ட்டை இந்தியாவுக்கு எதிராக ஆடுகிறது ஆப்கானிஸ்தான்!
டெல்லி: டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. இந்தப் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-18ல் நடக்க உள்ளது.
ஆசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் நாடு அந்தஸ்தை ஐசிசி அளித்துள்ளது. அதையடுத்து ஆப்கானிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியா முன்வந்தது.

ஜூன் 14-18ல் பெங்களூருவில் இந்தப் போட்டி நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் ஏதாவது ஒரு மைதானத்தை தனது ஹோம்’ மைதானமாக ஆப்கானிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் விளையாடும் 12வது நாடு. ஆசியாவில் 5வது நாடாகும். இந்தியா, 1932ல் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. அதன்பிறகு, பாகிஸ்தான் 1952, இலங்கை, 1982, வங்கதேசம், 2000ம் ஆண்டில் இருந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகின்றன.
இதற்கு முன் பல்வேறு நாடுகளுக்கு அறிமுக வாய்ப்பை இந்தியா அளித்துள்ளது. 1991ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் சர்வதேசப் போட்டியில் விளையாடத் துவங்கியபோது, அது முதல் முறையாக இந்தியவுடன் 3 ஒருதினப் போட்டிகளில் விளையாடியது.
வங்கதேச கிரிக்கெட் அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை, 2000 அக்டோபரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியது.
பாகிஸ்தானும் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராகவே விளையாடியது. ஜிம்பாப்வே அணியும் இந்தியாவுக்கு எதிராகத்தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது.
ஆப்கானிஸ்தானுடன் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி, மே 11ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளது.
Story first published: Wednesday, January 17, 2018, 11:51 [IST]
Other articles published on Jan 17, 2018


Click it and Unblock the Notifications