Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாடி ஷேமிங்.. கெட்ட வார்த்தை.. ஆஸி.க்கள் மீது கடும் கோபத்தில் இந்திய வீரர்கள்.. இனி நடப்பதை பாருங்க!

சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்த விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. களத்திற்கு உள்ளேயும், களத்திற்கு வெளியேயும் நிலவரம் மிகவும் பரபரப்பாக உள்ளது.

அதிலும் களத்தில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டுவதும், தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்வதும் கடுமையான வார்த்தைகளால் சீண்டுவதும் வைரலாகி வருகிறது.

நிலைமை எப்படி

நிலைமை எப்படி

ஆஸ்திரேலிய - இந்திய கிரிக்கெட் தொடர் தொடக்கத்தில் பெரிய அளவில் சண்டை, சச்சரவு இல்லாமல்தான் சென்றது. ஆனால் போக போக ஆஸ்திரேலியா வீரர்கள் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். தொடக்கத்தில் இந்திய வீரர்களை காமெடியாக கிண்டல் செய்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அளவு மீறி விமர்சனம் செய்ய தொடங்கினார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

அதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் இந்திய வீரர் பண்டை குண்டாக இருப்பதாக கூறி "பாடி ஷேமிங்'' செய்தார். தொடர்ந்து பண்ட் குறித்தும் அவரின் உடல் எடை குறித்தும் கிண்டல் செய்தார்.

அஸ்வின்

அஸ்வின்

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர் அஸ்வினை, உங்களை யாருக்கும் பிடிக்காது. உங்கள் அணி வீரருக்கே உங்களை பிடிக்காது. அதனால்தான் ஐபிஎல்லில் உங்களை எந்த அணியும் எடுப்பது இல்லை., என்று டிம் பெயின் குறிப்பிட்டுள்ளார். அதோடு அஸ்வினின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து, அவரை கெட்ட வார்த்தையில் டிம் பெயின் திட்டினார்.

மோசம்

மோசம்

அதிலும் மேத்யூ வேட் இந்திய வீரர்களை பல இடங்களில் தேவையின்றி சீண்டினார். இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படி வரம்பு மீறி பல இடங்களில் கிண்டல் செய்தனர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் கசப்பு மருந்தை அவர்களுக்கே திருப்பி கொடுக்க இந்திய வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பவுன்சர்

பவுன்சர்

நெஞ்சை குறி வைத்து பவுன்சர் வீசுவது, பேட்ஸ்மேன்களை சிந்திக்க விடமால் தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்வது போன்ற வேலைகளை இந்திய வீரர்களும் செய்ய உள்ளனர். அதிலும் இந்திய அணியில் ஷர்த்துல் தாக்கூர், சைனி, பண்ட் ஆகியோர் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக ஸ்லெட்ஜ் செய்ய போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

சைனி

சைனி

அதிலும் சைனியை வைத்து பவுன்சர்களை வீசும் திட்டத்தில் இந்திய அணி உள்ளது. இரண்டு நாட்டு ஏ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சைனியின் பவுன்சர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதேபோல் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பவுலர்கள் அச்சுறுத்தும் வகையில் செயல்படுவார்கள் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, January 12, 2021, 22:07 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+