Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் 20 ஓவர் போட்டி..ஜிம்பாப்வேயை வெளுத்து வாங்கியது இந்தியா.. 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...

ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

india

தொடர்ந்து இவ்விரு அணிகளும் இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் மோதுகின்றன. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கியது. ரகானேவும் முரளி விஜயும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்களை சேர்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. முரளி விஜய் 34 ரன்களில் வெளியேறினார்.

இதைதொடர்ந்து ரகானே 33 ரன்களுக்கும், மனிஷ் பாண்டே 19 ரன்களுக்கும், ஜாதவ் 9 ரன்களுக்கும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்களுக்கும் என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஓரளவு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 39 ரன்களை சேர்த்து இருந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க விக்கெட்டுக்கு 55 ரன்களை சேர்த்து அசத்தியது. 8.1 ஓவர்களில் 55 ரன்களை சேர்த்திருந்த நிலையில், மசகட்சா 28 ரன்னில் வெளியேறினார்.

அடுத்த சற்று நேரத்தில் மற்றொரு துவக்க வீரர் சிபாபா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைதொடர்ந்து வந்த வீரர்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் பவிலியன் திரும்பினர்.

இதனால், ஜிம்பாப்வே அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் விருது 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அக்சார் படேலுக்கு வழங்கப்பட்டது.

Story first published: Friday, July 17, 2015, 20:52 [IST]
Other articles published on Jul 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+